பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 85 துணைக் கோளுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு ஆற்றல் துணைக் கோள் பூமியைச் சுற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றலாகிச் சரிகட்டப் பெறுகின்றது. இதுவே எடையின்மை உணர்ச்சிக்குக் காரணமாகின்றது. இதன் விளைவாக யாவும் அந்தரத்தில் தொங்குகின்றன. இவை மேல் நோக்கியும் போவதில்லை; கீழ் நோக்கியும் இறங்குவதில்லை. நம் வான்மதி விநாடிக்கு 1024 கி.மீ. வீதம் சுழன்று கொண்டு அந்தரத்தில் தொங்குவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். (உ) விசித்திர நிகழ்ச்சிகள் : இங்ஙனம் நிலையற்ற நிலைமை ஏற்படுங்கால் விண்வெளிக் கூண்டினுள் சில விசித்திர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. துணைக்கோளினுள் சேர்த்துக் கட்டப் பெறாத பொருள்கள் யாவும் கூண்டினுள் பறந்து கொண்டிருக்கும். வீரர் எழுதும் பென்சில் ஒன்று கூண்டினுள் பறந்து கொண்டிருந்ததாம். அவர் உண்னும் உணவு கூட அடிவற்றினுள் அமையாது வயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும். வீரரும் கூண்டினுள் திருகாணியால் பொருத்தப் பெற்றிருக்கும் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப் பெற்றிருப்பார் இல்லையெனில் அவரும் கூண்டினுள் பிலாஸ்டிக் பொம்மைபோல் மிதந்து கொண்டிருக்க நேரிடும். எடையின்மையால் உடல்நிலை பாதிக்கப் பெறுவதில்லை. ஆயினும் எடையற்ற நிலையை ஒரு குறுகிய கால எல்லைக்குத்தான் ஏற்படுத்த முடியும். - 9. அடிப்படைத் தேவைகள் : எல்லையற்ற விண்வெளி யிலிருக்கும்போது விண்வெளி வீரர்கட்கு இனறியமையாத அடிப்படைத் தேவைகளை முதலில் கவனிக்க வேண்டும். (அ) சுவாசிக்கும் முறை : சுவாசிப்பதற்கு உயிரியம் இன்றியமையாதது. விண்வெளிக் கலத்தில் திரவ உயிரியத்தை எடுத்துச் செல்லுகின்றனர். நம் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் 2 சதவிகிதம் உயிரியமும் 78 விழுக்க்ாடு நைட்ரோஜெனும் ஒரு சதவிகிதம் ஆர்கான் என்ற வாயும், நீராவியும் மற்றும் வாயுப் பொருளும் உள்ளன.