பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழில் அறிவியல் செல்வம் விண்வெளியிலிருக்கும் போது இவ்விகிதத்தில் வாயுக்கள் கலப்பதில்லை. விண்வெளியில் காற்றின் அழுத்தம் மிகவும் குறைந்து விடுகின்றது. தேவையான அளவு காற்றழுத்தம் இருக்கும்வரையில் நைட்ரொஜன் நமது குருதியில் எளிதாகக் கலந்து விடுகின்றது. அழுத்தம் குறையுங்கால் அது குருதியில் கலக்காமல் குமிழிகளாகத் தோற்றம் அளிக்கின்றது. இதனால் ஒருவருக்கு உயிரிழப்பு நேரிடலாம். கடலில் மூழ்குபவர்கட்கும் இதே பிரச்சினைதான் நேரிடுகின்றது. ஆகவே, உயிரியத்துடன் கலப்பதற்கு நைட்ரொஜனுக்குப் பதிலாக பரிதியம் (Heleயா)சேர்க்கப் பெறுகின்றது. பரிதியம் குருதியுடன் நன்கு கலக்கக் கூடிய வாயுவாகும். எனவே, குமிழிகள் தோன்றுவதில்லை. தவிர, பரிதியம் நைட்ரோஜனை விட இலேசாக இருப்பதனால் விண்வெளிக் கலத்தில் எடுத்துச் செல்ல எளிதாகும். . (ஆ) உணவு முறை : எடையற்ற நிலையில் குவளை நீரை அண்ணாந்து பருக முடியாது. இந்நிலையில் நீர் குவளையினின்றும் கீழே விழாது. உறிஞ்சிதான் பருகுதல் வேண்டும். அதனால் நீண்ட குழாய் பொருத்தப்பெற்ற பாலிதீன் புட்டிகளில் பானங்களை வைத்திருப்பர். புட்டிகளை அழுத்திப் பீறிட்டு வெளியேறும் பானத்தைப் பருகுதல் வேண்டும். r - - உண்ண வேண்டிய உணவும் பசை வடிவில் பல்பசை வைத்திருப்பது போன்ற குழாய்களில் அடைக்கப் பெற்றிருக்கும். அக்குழல்களை வாயில் திணித்துக் கொண்டு அமுக்கிப் பசை வடிவிலுள்ள உணவை உண்ண வேண்டும். இன்னொரு விசித்திர நிகழ்ச்சியையும் உணரலாம். வயிற்றுக்குள் சென்ற பிறகும் உணவு வயிற்றின் அடிப்பகுதியை அடையாம்ல் மிதந்து கொண்டிருக்கும். ஆயினும், உணவு செரிமானம் ஆவதில் யாதொரு இடையூறும் ஏற்படுவதில்லை. நல்ல வேளையாக எடையற்ற நிலையில் உறுப்புகள் எவ்விதத் தீங்குமின்றி நன்றாகவே