பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 89 நிலையிலிருக்குமாறு கட்டுப்படுத்தப் பெறுகின்றது. இதனால், வீரரின் உடல் செளகரியமான நிலையிலிருக்குமாறு காக்கப் பெறுகின்றது. விண்வெளிவீரர் தலையிலணிந்து கொள்ள வேண்டிய தொப்பி ஒருவகை நார்க்கண்ணாடியால் (FibreGlass ஆனது. தொப்பியின் முன்புறம் கண்பார்வைக்கு உதவும்படியாகக் கண்ணாடித் தகடுகள் உள்ளன. சுவாசிப்பதற்கு உயிரியம் குழல் மூலம் செல்லுகின்றது. சுவாசித்தபிறகு வெளிவரும் கரியமில வாயு லித்தியம் Gögspyrtóab)&m)(3) (Lithium Hydroxide) என்னும் வேதியியல் பொருளால் உறிஞ்சப்பெறுகின்றது. நெடுந்தொலைவுப் பயணத்தின்பொழுது வேறொரு முறை கையாளப் பெறுகின்றது. கூண்டிற்குள்ளாக குளோரெல்லா (chlorella என்ற ஒருவித பாசி வளர்க்கப் பெறும். இது விண்வெளி வீரர் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்று கார்போஹைரேட்டைத் தயாரித்து உயிரியத்தை வெளிவிடும். இது மீண்டும் மீண்டும் சுவாசிப்பதற்குப் பயன்படுகின்றது. (ஏ) விமானதளத்தில் கவனம் : விண்வெளி வீரரின் உடல்நிலையைப் பூமியிலிருந்து தொடர்ந்து கவனிப்பர். விண்வெளி வீரரின் உடலில் பல பகுதிகளில் ஒட்டிவைக்கப் பெற்றுள்ள உணர்விகள் (Sensors) என்ற சிறுசிறு உறுப்புகள் தொலைநிகழ்ச்சி அறிகருவியுடன இணைக்கப் பெற்றிருக்கும். இக்கருவி விண்வெளி வீரரின் இதயத்துடிப்பு சுவாசிக்கும் வேகம், குருதியழுத்தம், நாடித்துடிப்பு போன்ற உடல் நிலைகளைப் பூமிக்கு அறிவித்துக் கொண்டே இருக்கும். விண்வெளி வீரரின் உறக்க நிலையிலும் விழிப்பு நிலையிலும் இந்த எடுகோள்கள் (Data) தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். விண்வெளிக் கலத்தினுள்ளிருக்கும் வானொலி பரப்பி, வானொலி ஏற்பி ஆகிய சாதனங்களைக் கொண்டு விண்வெளி வீரர் பூமியிலுள்ள தளநிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பார். இவற்றைத் தவிர விண்வெளிக் கலத்தினுள்