பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 94 அம்புலித் திட்டங்களை அறிந்தவர்கள் விண்வெளி வீரர்களின் பயிற்சி எத்தகையது என்பதை உணர்வார்கள். எத்தகைய சூழ்நிலைக்கும் அவர்களின் உடல்நிலை ஒத்துவரல் வேண்டும். பூமியிலுள்ள தரைநிலையத்திலிருந்து வரும் கட்டளைக்கேற்ப செயற்படும் திறன் இவர்களிடம் அமைதல் வேண்டும். எதிர்பாராத நிலைமை ஏற்படுமாயின் அவற்றைச் சமாளிக்கும் திறனும் அமைதல் வேண்டும். இறுவாய்: அம்புலியைச் சென்றடைதல் என்பது ஒரு தொடக்கநிலைச் செயலேயாகும். அம்புலியை விண்வெளியின் தலைவாசல் என்றுதான் கருதுதல் வேண்டும், மனிதன் எதிர்காலத்தில் அம்புலிக்கு அப்பாலும் செல்வான். செவ்வாய், வெள்ளிப் பயணங்கள் இதற்குச் சூசகமாக அமைகின்றன. அணுவாற்றலைப் பயன்படுத்தும் விண்கலத்திலோ அல்லது கதிரவன் ஒளியையே ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்தும் விண்கலத்திலோ இருந்து செல்வான். நாம் ஒருகால் கானாவிடிலும் அடுத்த தலை முறையினராவது செவ்வாய்க் கோளில் அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி நிலையங்களை நிறு வி யி ரு ப் ப ைத க் காண் பர் வழி வழி வரும் வருங்காலச்சந்ததியினர் அறிவியலாரின் ஆறிவாற்றலையும் அறிவியல் வளர்ச்சியினையும் நினைந்து வியந்து போற்றுவர், மேலும், சாட்டி நிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டு விக்கும் குற்றாலத்து அண்ணலார்" என்ற கவிஞன் போற்றிப் புகழ்ந்துரைப்பது போலவே, அவர்களும் இந்த அகிலத்தின் இயக்கத்துடன் அண்டம், பேரண்டம், எல்லையற்ற அண்டபகிரண்டம் இவற்றின் இயக்கத்திற்கே அதிபதியாகத் திகழும் ஆண்டவனின் அலகிலா விளையாட்டுகளை எண்ணி எண்ணி அடக்கமும் பெறுவர். - 40. குற். குறவஞ்சி - 0.