பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழில் அறிவியல் செல்வம் சில சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்க நினைத்து அப்பகுதியையும் இணைத்துக் கொண்டேன். இனி மானிடப் பிறப்புபற்றிய செய்திகளை விளக்க முற்படுகின்றேன். 1. மானிடப் பிறப்பியல் இந்த உலகில் தோன்றிய உயிர்த்திரள்களில் மனிதன் தான் படைப்பு ஏணிப்படியில் உச்சகட்டப் படியில் வீற்றிருக்கின்றான். அவன்தான் எல்லா உயிர்ப் பிராணிகளையும் அடக்கி ஆள்கின்றான். டார்வின் கொள்கைப்படியும், அதாவது கூர்தல் அறக்கொள்கைப் படியும் TheorமுefE00யிor) மனிதன் உயர்நிலையில் உள்ளான். இதனை நம் சமயவாதிகள் ஏழேல் பிறப்பு என்றும் எழுபிறப்பு என்றும் சாற்றுவர். பிறப்புக் கொள்கை விளங்காப் புதிராக இருப்பதால் மாயப்பிறப்பு (Musterமாsbit என்று குறிப்பிடுவர் மணிவாசகப் பெருமான். அப்பெருமானே, புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விரு மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் - * 和 ாய்ப் G. - . 岛 - . 豫、 வல்லகராகி முனிவராய்த் தேவராயச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்.1 என்று ஒரு கொள்கையைக் குறிப்பிடுவார். மானிடப் பிறப்பின் சிறப்பு இறைவன் மனிதனுக்கு மட்டிலுமே பகுத்தறிவு வழங்கியுள்ளான். ஆதலால் தன்னையும் பிறவற்றையும் அறிகின்றான். தன்னுடைய அறிவைக் கொண்டே மொழியின் துணையால் தன் அநுபவங்களை யெல்லாம் பதிந்து வைத்துள்ளான். அதுதான் இன்று இலக்கியம், அறிவியல், பொறியியல், சிற்பம், ஒவியம், இசை போன்ற பிரிவுகளாகத் திகழ்கின்றன. இவற்ற்ையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு - தன் மூதாதையர் படைத்த அதுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அவனுடைய குழந்தை 1 திருவா. சிவபுராணம் - அடி 26 - 5.