பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 99 பணியாற்றுகின்றன. ஆனால் பிறப்புறுப்புகள் அடங்கிய இனப்பெருக்க மண்டலம் இனப்பெருக்கத்தை வளர்ப்பதில் மட்டிலுந்தான் பணியாற்றுகின்றது. ஒர் ஆண் பிறப்புறுப்புகள் அடங்கிய தொகுதிககும் ஒரு பெண் பிறப்புறுப்புகள் அடங்கிய தொகுதிக்கும் நெருங்கிய ஒற்றுமையை நயம் (Analogu) காணப்பெறுகின்றது. இந்த ஒற்றுமை நயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் முறையில், அவை செயற்படும் அடிப்படையில், பிறப்புறுப்புகள் எவ்வாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன என்பதை நோக்கினால் இறைவன் படையின் அதிசயத்தைக் காணமுடிகன்றது. (அ) உயிரணுக்களை (Geminal Cells) உற்பத்தி செய்யும் காகச் கரப்பிகள் (Se:glands : ஆணிடம் இவை விரைகள் என்றும், பெண்ணிடம் இவை சூற்பைகள் என்றும் வழங்கப் பெறுகின்றன. உயிரியல் அறிஞர்கள் இவற்றை இன கோணங்கள் (Gonads) என்று வழங்குவர். & . . (ஆ) இந்த உயிரணுக்களை உரிய இடங்களுக்கு அனுப்பிக் கருவுறுதலைச் சாத்தியமடையச் செய்யும் தும்புகள் (Ducts) : ஆணிடம் விந்தேறு குழல், எபிடிடைமஸ், விந்து பாய்ச்சும் தூம்பு, சிறுநீர்ப் புறவழி ஆகியவையும் பெண்ணிடம் கருக்குழலும் இங்ங்னம் செயல்களைப் புரிகின்றன. இ) கருவுறுதலுக்கான விந்தனுக்களை முட்டையிடம் சேர்க்கும் உறுப்புக்கள் : ஆணிடம் ஆண்குறியும் (இலிங்கமும்: பெண்ணிடம் யோனிக் குழலும் இங்ங்ணம் சேர்க்கும் பணியைப் புரிகின்றன. கருப்பை கருவுற்ற முட்டையணுவைத் தன்னிடம் இருத்திக் குழந்தையாக வளரும் வரை அதனைப் பாதுகாக்கின்றது. இச்செய்திகள்ை (1) ஆண் உறுப்புகள் (2 பெண் உறுப்புகள் என்ற தலைப்புகளில் பாகுபடுத்தி விளக்க முயல்வேன். . 蚤-8