பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 103 (இ) விந்தணுக்களின் தன்மை : விந்து வெளியேறினவுடன் அது பசைபோன்றிருக்கும். ஆனால் மூன்றிலிருந்து பதினைந்து மணித்துளிகளுக்குள் அது நீர்நிலைக்கு வந்து விடுகின்றது. புதிதாக விடுவிக்கப்பெற்ற பசைபோன்ற விந்துவில் இந்த விந்தனுக்கள் அசையா நிலையிலிருக்கும்; ஆனால் அது நீர்நிலைக்கு வ்ந்தவுடன் இந்த அணுக்கள் விரைவாக அசைந்து செல்லக் கூடும். ஒரு விந்தணுவின் நீளம் 1/600 அங்குலம் என்று கணக்கிடப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண நுண்பெருக்கியிலும் அதனைக் காணலாம். ஒரு துளி விந்துப் பாய்மத்தில் (Seminal fluid) அவை அசைவதைக் காண்பதற்கு மிக ஆர்வமாக இருக்கும். புதிதாக எடுக்கப்பெற்ற பாய்மத்தில் அவை ஒவ்வொரு துளியிலும் கூட்டங்களாக அசைவதைக் காணலாம. ஒரு விந்த்னு எட்டு மணித்துளிகளில் ஒர் அங்குலம் தொலைவு அசைந்து செல்லக் கூடும் என்பர். (ஈ) விந்தணுவின் உருவம் : ஒரு விந்தணுவை உற்று நோக்கினால் அது தவளையின் தலைப்பிரட்டை (Tadpole) போல் காணப்படுவது தெரியவரும். அஃது ஒரு முட்டை வடிவமான கூரியதலையையும் ஒரு சிறிய நடுப்பகுதியையும் ஒரு நீண்ட மெல்லிய வாலையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியிலும் நடுப்பகுதியிலும்தான் நிறக் கோல்களும் (Chromosomes) offsääsijob (Genes) of fisälusorator. Q## இரண்டு பகுதிகள்தாம் இனப் பெருக்கத்திலும் பங்கு பெறுகின்றன. உண்மையில் அசையும் பொறிநுட்பம் நடுப்பகுதியிலிருந்த போதிலும் வால் பகுதிதான் இப்பக்கமும் அப்பக்கமுமாக அடித்துக் கொண்டு உயிரணுவின் இயக்கத்திற்குக் காரணமாகின்றது. சிறிது நேரத்தில் இயக்கத்தின் வேகம் குறைந்து கொண்டே சென்று இறுதியில் நின்றே போகின்றது. விந்தணுவும் அசையா நிலையிலிருந்து மரித்து விடுகின்றது. - (உ) விந்தணுவின் ஆயுட்காலம்: பெண்ணின் இனப்ப ருெக்க உறுப்புகளில் இவற்றின் ஆயுட்காலம் பற்றிப் பின்னர் விளக்குவேன். உடலுக்கு வெளியில் அவற்றின் வாழ்வு அவை