பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$66 தமிழில் அறிவியல் செல்வம் (Pituitar gland) கழுத்துப் பகுதியில் உள்ள புரிசைச் சுரப்பி - கேடயச் சுரப்பி (Thuroid gland), சிறு நீரகங்களின்மீது கிரீடம் போல் அமைந்துள்ள மாங்காய்ச் சுரப்பிகள் (Adreual glands), இன கோளங்கள் (Gonads - இவை ஆண்களிடமுள்ள விரைகள் (Testes), பெண்களிடமுள்ள சூற்பைகள் (Ouaries) ஆகியவை மிகவும் முக்கியமானவை. பெரும்பாலான ஹார்மோன்கள் பாலுணர்ச்சியிலும் இனப் பெருக்கத்திலும் முக்கிய பங்கு கொள்ளுகின்றன. நமது உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளையும் இழையங்களையும் தொடக்குவதிலும் தூண்டுவதிலும் இந்த ஹார்மோன்கள் பெரும் பங்கு பெறுகின்றன. ஒவ்வொரு ஹார்மோனுக்கும் நம் உடலின் பொறிநுட்பத்தில் தனிப்பட்ட பங்கு உண்டு என்பர் அறிவியலறிஞர்கள். எனினும், இந்த எல்லாச் சுரப்பிகளும் ஒன்றுக் கொன்று இன்றியமையாத செயலையும் புரிகின்றன. ஒன்று சரியாகச் செயற்படாவிடினும் ஏனையவை சரியாக இயங்காமல் பாதிக்கப் பெறும். - {每》 பாலறிகுறிகள் : மானிடக் காமச் சுரப்பிகளில் உண்டாகும் ஹார்மோன்கள் இடைதிலைப்பாலறிச் சிறப்பியல்புகளை உண்டாக்குவதே அவற்றின் தனிப்பட்ட செயலாகும். இந்தச் சிறப்பியல்புகளே பெண்ணிடமிருந்து ஆணைப் பிரித்து அறியத் துணைசெய்கின்றன. அமைப்பிலும் செயலிலும் ஒரு பாலிடம் காண்ப்பெறாத ஒரு சில சிறப்பியல்புகளால்தான் இருபாலாரையும் பிரித்தறிய முடிகின்றது. பிறப்புறுப்புகளே முதல் நிலைச்சிறப்புயல்புகளைக் காட்டுபவை. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் பிறப்புறுப்புகளைக் கொண்டே அஃது ஆணா, பெண்ணா? என்று சொல்லி விடுகின்றோம். - -- இக் குழந்தை வளர வளர மேலும் பிறித்தறிவதற்கு வேறு சிறப்பியல்களும் தலைக்காட்டுகின்றன. விரகறிபருவத்தில் (Pubertயூ பையனின் முகத்தில் மீசையும் தாடியும் அரும்புகின்றன. அவனுடைய குரல்வளைப் பெரிதாகிக் குரலும் தடிக்கின்றது. உடலின் கட்டமைப்பிலும் சிறப்பாக