பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 107 ஆணென்று வேறுபடுத்திக் காட்டுகின்றது. சிறுமி படிப்படியாக உருண்டை வடிவத்தைப பெறுகின்றாள்; கொங்கைகள் பருக்கின்றன; இடுப்பு விரிவடைகின்றது அக்குளிலும் பெண்குறியிலும் உரோமங்கள் முளைக்கின்றன. இவைதாம் இடைநிலைப் பாலறிகுறிகளாம் (Secondar sex characteristics). Q) so su Li Gu 15 J frcos 3 of L (up 18 கானப்பெறுகின்றன. சேவலுக்குக் கொண்டையும் குதி.முட்களும் தோன்றுகின்றன. பல பறவைகளின் இறகுத் தொகுதிகள் பாலுக்கேற்றமாற்றம் அடைகின்றன. இவை யாவும் இடைநிலைப் பாலறிகுறிகளே. (ஐ) விரையடித்தல் : பிராணிகள் பிறந்தவுடன் அவற்றின் விரைகளை நீக்கிவிட்டால் அவற்றிடம் இந்த இடைநிலைப் பாலறிகுறிகள் தோன்றா. எடுத்துக்காட்டாக விரையடிக்கப் பெற்ற சேவலிடம் கொண்டைகளும் தாடிகளும் தோன்றா; அஃது அதிகாலையில் கூவுவதில்லை; அதனிடம் சண்டையிடும் தன்மை இருப்பதில்லை; அது பெட்டைக் கோழியையும் நாடுவதில்லை. கலை மானிடமும் செம்மறியாட்டிடமும் விரையடித்தலாகிய இச்செயல் கொம்புகள் முளைப்பதைத் தடுக்கின்றது. காளை, எருது இவவ்றினிடையே உள்ள வேறுபாடுகளை நாம் அறிவோம். இவை யாவும் விரையடித்தாலேயே நிகழ்பவை. இத்தகைய செயல் பண்டிருந்தே குதிரைகள், காளைகள், ஏனைய வீட்டுப் பிராணிகளிடம் செய்யப்பெற்று வருகின்றன. விரையடிக்கப் பெற்ற பிராணிகள் மிகவும் அடங்கியும் எளிதில் கட்டுப்படக் கூடியவையாயும் இருப்பதை நாம் கவனித்து அறியலாம். அவை கொழுப்புடனும் புணர்ச்சித்துடிப்பின்றியும் காணப் பெறுகின்றன. - சிறுவனொருவன் விரகறிபருவம் எய்துவதற்கு முன்னர் அவனுடைய விரைகளை நீக்கி விட்டால் அச்செயல் அவன் பிற்கால வளர்ச்சி தோற்றம், ஆளுமை (Personalig) முதலியவற்றைப் பாதிக்கின்றது. இத்தகைய அறுவைச் செயல் பல்வேறு காரணமங்களால் செய்யப் பெறுகின்றது. கீழ்