பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் G57ಹ೩ನು 409 சுரப்பிகளை இடம் பெயர்த்து நடுதல்: இவ்விடத்தில் இன்னொரு வியப்பிற்குரிய செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு பிராணியின் உடலினின்றும் ஒரு சுரப்பியை நீக்கி அதனைப் பிறிதொரு பிராணியின் உடலில் பதியவைத்தலில் அறிவியலறிஞர்கள் வெற்றி கண்டுள்ளனர். இப்பிராணிகள் ஒரே இனத்தைச் சார்ந்தவைகளாகவும் இருக்கலாம்; வேறு இனத்தைச் சார்ந்தவையாகவும் இருக்கலாம். இத்தகைய சோதனைகள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோதனையாகச் செய்யப் பெற்றன. அண்மைக்காலத்தில் இவை பெரிய அளவுகளில் மேற்கொள்ளப் பெற்றும் வருகின்றன. இத்துறையில் ஸ்டீனக் (Steinach) என்ற பேராசிரியரின் சோதனைகள் மிகவும் குறிப்பிடத் தக்கவை. வியன்னா நகரைச் சார்ந்த இந்த அறிஞர் ஆண், பெண் பிராணிகளை விரைடித்தார்; இப்பிராணிகள் அலித் தன்மையை அடைந்தன. பிறகு இந்தப் பிராணிகளுள் ஆணிடம் பெண்ணின் சுரப்பிகளையும் பெண்ணிடம் ஆணின் சுரப்பிகளையும் பெயர்த்து வைத்தார். இவற்றிடம் முறையே பெண்ணின் சிறப்பியல்புகளும் ஆணின் சிறப்பியல்புகளும் தோன்றின. இச் சோதனைகளை அவர் எலிகள், ஒருவகை முயல்கள், சில பறவைகள் ஆகியவற்றிடம் செய்து வெற்றி கண்டார். - மனிதர்களிடம் : இது காறும் மனிதரிடம் இச் சோதனைகள் செய்யப் பெற்றனவாகத் தெரியவில்லை, பிராணிளைப் போலவே மனிதன் இவ்வகைச் சோதனைகட்கு எங்ங்னம் உட்படுவான்? ஆனால் 1914 இல் லிட்ஸ்டன் (Ludston) என்ற ஓர் அமெரிக்க மருத்துவர் தற்கொலை புரிந்து கொண்ட ஒருவருடைய விரையைத் தம்முடைய விரைப்பையில் புதைத்து விளைவுகளைக் கவனித்ததில், அவர் தம்முடைய உடல் நலத்தில் மேம்பாடு கண்டதாகவும், ஆற்றலை அதிகமாக்கியதாகவும் கூறியுள்ளார். வேறு அறிவாளர்களும் இத்தகைய சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.