பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - தமிழில் அறிவியல் செல்வம் வெணரொனாஃப் (Woronal என்பார் குரங்கினுடைய விரைகளை நட்டுச் சிறப்பான விளைவுகளை வெளியிட்டுள்ளார். ஆனால் இவ்விளைவுகள் எந்த அளவு புதியனவாக நடப்பெற்ற சுரப்பிகளின் கர்ப்பு நீர்களால் ஏற்பட்டவை, எந்த அளவு தனியாளின் மனத்துண்டலால் ஏற்பட்டவை என்பது இன்னும் வாதத்திற்குள்ளதாகவே உள்ளது. இயற்கை அன்னையின் சோதனைகள் : இத்தகைய சோதனைகளைச் சிலசமயம் இயற்கையன்னையே நடத்தி மகிழ்கின்றாள். சிலசமயம் ஆண், பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறிய வியத்தகு செய்திகள் வெளிவந்ததை நான்பார்த்துப் படித்தாக நினைவு பல்லாண்டுகட்கு முன்பு. பெண்ணிடத்தில் தாடி வளர்கின்றது, ஆண்குரல் தோன்றுகின்றது; கொங்கைகள் சுருங்கி மறைகின்றன. பிறப்புறுப்புகளும் மாறுகின்றன. இதற்கு மாறாக ஆணிடமும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய மாற்றங்கள் சிறுநீரகத்திற்கு மேலுள்ள சுரப்பிகள் (Super renal glands) அளவுக்கு மீறிச் செயற்படுவதனாலும் வேறு காரணங்களாலும் நிகழ்கின்றன என்று கருதப்பெறுகின்றது. பெண் ஆணாக மாறும் ஆளிடம் ஆண் விரைகளைப் போன்ற அமைப்புகள் பெண்ணின் சூற்பைகளில் வளர்ந்து இருப்பதாகவும், அங்ங்னமே ஆண் பெண்ணாக மாறும் ஆளிடம் சூற்பைகளைப் போன்ற அமைப்புகள் அவன் விரைகளில் தோன்றியுள்ளனவாகவும் காணப்பெற்றன. இந்த வகையிலும் புதிய வளர்ச்சியினை நீக்கிவிட்டால் ஆட்கள் சாதாரண நிலையினை அடைகின்றனர். பாரதத்தில் வரும் திரெளபதியின் சகோதரனான சிகண்டி'பெண்ணாகப் பிறந்து .ே அம்பை, அம்பிகை அம்பாலிகை காசிராசனின் புத்திரிகள் அம்பிகையும் அம்பாலிகையும் பீஷ்மரால் கவரப்பெற்று தம் தம்பியர் விசித்திரவீரியன் சித்திரங்கதனுக்கு மணம் செய்விக்கப் பெற்றனர். அம்பையைச் சாளுவன் மறுத்தமையால், அம்பை தவஞ்செய்து காளியின் வரத்தால் துருபதனுக்குச் சிகண்டியாகப் பிறந்தவள். பத்தாம்நாள் பாரதப் போரில் பார்த்தன் அருகிலிருந்து பீஷ்மர் மாயக் காரணமானவள்.