பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 413 (iw) விந்துப் பைகள் coff glycolyscir (Seminal vesicles) # profilosoutjair பின்புறத்தில் அடிப்பக்கத்தில் பக்கத்திற் கொன்றாக அமைந்துள்ள பழங்காலத்துருத்திகள் போன்ற உறுப்புகளாகும். இவை ஒரு தனித்தன்மையுள்ள தூம்பினால் விந்தேறு குழலுடன் இணைகின்றன. இவை பசைபோன்ற சற்று மஞ்சள் நிறமுள்ள சுரப்பு நீரினை உண்டாக்குகின்றன. இந்த நீர் விந்தனுக்களுடன் சேர்ந்து விந்துப் பாய்மத்தைச் (Seminal fluid) சற்றுக் கெட்டியாக்கி அதன் அளவினையும் அதிகரிக்கச் செய்கினறது. இந்நீரில் ஃபிரக்டோஸ் (Fructose) என்ற பிரத்தியேகமான சருக்கரை அடங்கியுள்ளது; இச்சருக்கரை விந்தணுக்களின் ஊட்டத்திற்கு வேண்டிய ஆற்றலை நல்குகின்றது. (w) புராஸ்டேட் சுரப்பி புராஸ்டேட் சுரப்பி என்பது சிறுநீர்ப் பையின் அடிப்பக்கத்தில் மலக்குடலுக்கு முன்புறமாகச் சிறு நீர்ப்புறவழியைச் சுற்றிலும் அமைந்துள்ள ஓர் உறுப்பு. மருத்துவர் மலக் குடலைப் பரிசோதிக்கும்போது தம் விரலால் புராஸ்டேட்டைத் தொட்டு, உணர்தல் எளிது. அதன் அளவையும் வடிவத்தையும் கூட அவர் ஒரளவு அறுதியிடக் கூடும். இந்தச் சுரப்பியின் மேலிருந்து கீழ்வரை சிறுநீர்ப் புறவழி துளைத்துச் செல்கின்றது. இப்பகுதியில் விந்துவை வெளியேற்றும் gothusir (Ejaculatory ducts egosoldså gjorsman. விந்து வெளிப்படுங்கால் உடன் தோன்றுகின்ற இன்ப உணர்ச்சி இப்பகுதியில்தான் உள்ளது என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப் பெற்றுள்ள ஓர் உண்மையாகும். புணர்ச்சியின் பொழுது உச்சநிலை உணர்ச்சியுடன் (Orgasm) விந்து வெளிப்படும் நிலையில் இச்சுரப்பி சுருங்கி மெல்லிதான பால் போன்ற சுரப்பு நீரைப்பாய்ச்சுகின்றது. இச்சுரப்பு நீர் தொடர்ச்சியாகவுள்ள மிக நுண்ணிய சிறுகுழல்கள் மூலம் மிகச் சிறுதுளிகளாக அனுப்பப்