பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் வழி இயலும் பொதுப்படிப்பு மாணாக்கர்கட்கும் - ஏன் மருத்துவப் படிப்பு மாணாக்கர்கட்கும் எட்டாப் பழமேயாகும். இயற்கை அமைப்பில் இனமாற்றம் நிகழாமல், உயிரினங்களின் வகைகள் மாறாமல் வாழையடிவாழையாக இருந்து வருவதற்கு மரபு வழியில் இயற்கை அன்னை புரிந்துவரும் அற்புதங்களை இந்த இயலில் அற்புதமாக விளக்கும் பேராசிரியரின் மதிநுட்பம் மிகவும் பாராட்டப் பெறவேண்டிய தொன்று. மரபுவழி இறங்கும் பண்புகள், மரபுவழி இறங்காப் பண்புகள் ஆகியவற்றிற்கு நிறக்கோல்களில் உள்ள ஜீன்களே காரணம் என்பதைத் தெளிவாக விளக்கியவர், மக்கட்பேறு பெறுவதில் உள்ள தவறான நம்பிக்கைகளையும் சுட்டியுரைப்பதில் தவறுவதில்லை. ஜீன்களின் திருவிளையாடல் அறபுதமாக விளக்கம் அடைகின்றது. ஆனா, பெண்ணா, இரண்டும்கெட்டான்கள், போலிகர்ப்பம், இரட்டைப் பிறவிகள், இயல்பிகந்த இரட்டையர், பல கோவைக் குழவிகள் போன்ற செய்திகள் அற்புதமாக விளக்கம் அடைகின்றன. நெடுநாள் வாழ்வுக்குக் காரணம், அது சீரழிவதற்குக் காரணங்கள் தெளிவாக விளக்கப் பெறுகின்றன. கால் வழி இயலில் புரட்சி கால்வழி இயல் - அனைத்துலக மாநாடு ஆகியவற்றின்கீழ் விளக்கப் பெறும் செய்திகள் அனைவரும் ஆழ்ந்த கவனத்துடன் தெரிந்து கொள்ள வேண்டியவை. இங்கும் பேராசிரியரின் விளக்கம் சுவைபெறுவதற்கு அவர் தம் பரந்த இலக்கியப் புலமை கைகொடுத்து உதவுவதைக் கண்டு மகிழலாம். இந்தப் பொழிவுகள் உருவம் பெறுவதற்குத் துணையாக அமைந்த ஆங்கில, தமிழ் நூல்களின் டட்டியல் பின்னிணைப்பில் தரப் பெற்றுள்ளன. 87 வயதிலுள்ள பேராசிரியர் ரெட்டியாரின் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பேராசிரியர் ரெட்டியாரின் அறிவியல், இலக்கிய, சமய, தத்துவ ஆர்வங்கள் மேலும் மேலும் வளரவும் இவர்தம் சமூகத் தொண்டு மேன்மேலும் பெருகவும் இவர் நூறாண்டு வாழவும் பிறசமயக் காழ்ப்பின்றி வைணவப் பற்றாளராகிய இவர் இராமநுசர் போல் 120 ஆண்டுகள் வாழவும் இயேசு பெருமான் திருவடிகளை நினைத்து ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி மகிழ்கின்றேன். இந்த நூல் அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்கட்கு அன்புப் படையலாக்கியது மிகவும் பொருத்தமானது போற்றப் பெறவேண்டிய தொன்றுமாகும். சென்னை - 600 005 நாள் 10.11.2002