பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 147 முழுவதும் நுட்பமான தொடுபுலனைக் கொண்டுள்ளது. மிக்க நுட்பமான தொடுபுலன் உணர்வினைக் கொண்ட இலிங்கத்தின் முகட்டிலுள்ள நரம்பு முடிவுகள் சுன்னத்துச் சடங்கினால் நாளடைவில் தம் நுட்பமான உணர்வினை இழக்கின்றன. இதனால் முகட்டில் துடிப்பு உண்டாதல் சற்றுச் சிரமமாகின்றது. இதன் காரணமாகவே சுன்னத்து செய்யப்பெற்ற மனிதன் அதிக நேரம் கலவி புரிகின்றான். அவனுக்கு உச்சநிலை உணர்ச்சி ஏற்படுவதற்குக் காலதாமதமாகின்றது. (ஆ) விறைத்தல் : ஆண்குறியின் வளையாத விறைத்த தன்மை புணர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இது விறைக்கும் நிலையை அடைவதற்கு அதன் அமைப்பே சாதகமாக உள்ளது. இதன் எல்லாப் பகுதிகளிலும் எண்ணற்ற சிறிய குகை போன்ற இடைவெளிகள் உள்ளன. இந்த இடங்கள் காலியாகவும், அவற்றின் சுவர்கள் ஒட்டிய நிலையில் இருக்கும்போதும் அது விரைகளின் முன்புறத்தில் தொங்கிய நிலையில் தூங்கிய நிலையில் இருக்கும். இப்போது அதில் சிறிய அளவில்தான் குருதி இருக்கும். இக்குறியில் புணர்ச்சித் துடிப்பு ஏற்படுங்கால் இந்த இடங்களில் குருதி விரைவாகப் பாய்ந்து நன்றாக நிரம்புகின்றது. இதிலுள்ள குருதிக்குழல்கள் பாய்குழல்களும் வடிகுழல்களும் - ஒரே சமயத்தில் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் குருதியை விடுவதற்கேற்றவாறு அமைந்துள்ளன. இஃதுடன் இலிங்கத்தில் ஏராளமான நீளுந்தன்மையுள்ள இழையம் (Tissue) இருப்பதால் அஃது இலிங்கத்தின் அளவுகளில் மாற்றம் அடைவதற்குத் துணையாகவும் உள்ளது. இலிங்க மெங்கும் பரவிநிற்கும் நரம்புக் பொறிநுட்பத்தினால் இச்செயல்கள். நடைபெறுகின்றன. அது புணர்ச்சித் துடிப்புடன் இருக்கும்பொழுது பருமனிலும் உறுதியிலும் மாற்றம் அடைகின்றது. புணர்ச்சித் துடிப்புக் காலம்வரை இந்நிலையிலேயே இருக்கும்.