பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழில் அறிவியல்-செல்வம் அங்குலம் அல்லது அதற்குமேல் குறுக்களவு கொண்ட ஒரு சோதனைக் கருவியை நுழைக்கக் கூடிய அளவிலும் இருக்கலாம். கன்னிப் பெண்ணிடம் கன்னிச் சவ்வில் தொளை இருக்கத்தான் செய்யும், மாதவிடாய் ஒழுக்கும் ஏனைய சுரப்பு நீர்களும் வெளியேற வேண்டுமல்லவா? அதற்காகவே இத்திறப்பு அமைந்துள்ளது. இத்திறப்பே இல்லாத சில பெண்ணிடம் பூப்புக்காலத்தில் இத்திறப்பினைச் செயற்கை முறையில் செய்தல் வேண்டும் அப்பொழுதுதான் உள்ளே தேங்கிக் கிடக்கும் குருதி வெளிப்படும். - (ஊ) கொங்கைகள் : பெண்ணின் வெளிப்புறச் சிறப்பு உறுப்புக்களுடன் சேர்ந்து ஆராய வேண்டிய உறுப்புதான் கொங்கைகள் அல்லது தாய்ப்பால் சுரப்பிகளாகும். இவற்றிற்கும் பிறப்புறுப்புகள் செயற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண்ணிடம் இடைநிலைப் பாலறிகுறிகளைக் காட்டுவதில் இவை மிகமிக முக்கியமானவை. இவற்றின் வளர்ச்சி பெண்ணின் காமச்சுரப்பிகளின் (Serglands) ஊறும் சுரப்பிச்சாறுகளால் பெரிதும் மாறுபடுகின்றது. சிறுவயதில் சிறுவனின் கொங்கைகளுக்கும் சிறுமியின் கொங்கைகளுக்கும் வேற்றுமையே இல்லை, பூப்பு எய்தும் காலத்தில்தான் சிறுமியின் கொங்கைகள் படிப்படியாகப் பருத்துத் திரண்டு உருண்டை வடிவத்தைப் பெறுகின்றன. புதியனவாகப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பால் சுரப்பதே கொங்கைகளின் முதல் நிலைச் செயலாகும். எனினும் இச்செயலுடன் இவை பெண்ணிடம் காம உணர்ச்சிகட்கும் நிலைக்களனாக அமைகின்றன. அவளுடைய துலங்கல்களிலும் (Response), எதிர்வினைகளிலும் முக்கிய பங்கினைப் பெறுகின்றன. பெரும்பாலும் கொங்கையின் முலைக்கண்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள கருநிறமுள்ள பகுதிகளிலும் மிக துண்ணிய தசை நார்களிலும் சுருங்கி நீளும் இழையமும் அமைந்துள்ளது. அவை தொடுதலாலும் காமத் தூண்டலாலும் சுருங்கி விறைத்த நிலையை அடைகின்றன: அவை காம உணர்ச்சியின் மண நிறைவு பெறுவதிலும் பங்கு