பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$24 தமிழில் அறிவியல் செல்வம் கலவியின் பொழுது ஆண்குறி செல்லும் வழி யோனிக் குழல் மட்டிலும் அன்று அவ்வழியில் பிறப்புறுப்புகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் அடங்குகின்றது. அது யோனிக்குழலின் வெளிப்புறமாகவுள்ள புனல் போன்ற பகுதியாகும். இப்பகுதி சுமார் ஒன்றரை அங்குல நீளமுள்ளது. மேலும் பிறப்புறுப்புகளைச் சுற்றிலுமுள்ள இழையங்களும் யோனிக்குழலின் சுவர்களும் விரித்து சுருங்கும் தன்மையனவாதலின் யோனிக்குழல் மூன்று அங்குல நீளமே இருப்பினும், பெண்ணின் இணைவிழைச்சின் வழி சாதாரணமாக ஐந்து அல்லது ஐந்தரை அங்குல நீளமாக அமைந்து ஆறு அங்குல நீளமுள்ள ஆண்குறி அவ்வழியில் நன்கு பொருத்தி விடுகின்றது. யோனிக் குழலின் சுவர் மூன்றடுக்குகளால் (lauer) ஆனது: இவற்றுள் மேற்பரப்பிலுள்ள அடுக்கு சளிச்சவ்வினால் மூடப்பெற்றுள்ளது. இந்தச் சவ்வில் சளியைச் சுரக்கும் சுரப்பிகள் இல்லை; ஆனால் இச்சவ்வு பல மடிப்புகளால் அ ைம ந் தி ரு ப் ப த ல் , மே ற் பர ப் பு வ ைள ந் து நெளிந்திருப்பதுபோல் காணப்பெறுகின்றது. இதனால் ஏற்படும் முகடுகள் சொரசொரப்பான பரப்பைத் தருகின்றன. இத்தகைய பரப்பு இணைவிழைச்சில் உச்சநிலை உணர்ச்சியைத் தருவதற்கும் துணை செய்கின்றது. மடிப்பும் யோனிக்குழல் விரிவதற்கும் துணையாகவுள்ளது; யோனிக் குழலின் நடு அடுக்கு தசையினாலானது; இதில் உள்ள குருதிக் குழல்க்ள் புணர்ச்சியின்பொழுது உப்பி யோனிக் குழலுக்கு ஒருவித விறைப்பினைத் தருகின்றது. தெருங்கியிருக்கும் குருதிக் குழல்கள் யோனிக்குழல் இலிங்கத்துடன் நன்கு பொருந்தி அதனை ஒரளவு இறுகப் பற்றுவதற்குத் துணையாக உள்ளன. இதனால் இலிங்கத்தின் உணர்ச்சி தரும் நரம்பின் முடிவுகளும் யோனிக்குழலின் அத்தகைய நரம்பின் முடிவுகளும் ஒன்றாக நெருங்கி இணைவதற்கு வாய்ப்பாக அமைகின்றது சாதாரணமாக யோனிக் குழலின் சுவர் ஒன்றேடொன்று ஒட்டியே இருக்கும்.