பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் - 125 குழலினுள் ஒரு பொருளை துழைக்கும் பொழுதுதான் அவை விரிந்து கொடுக்கும். அஃதாவது, இயல்பான நிலையில் யோனிக்குழல் காற்றில்லாத பலூன்போல் இருக்கும். யோனி வாயின் (Vaginal orifice அளவும் பெரும்பாலும் வேறுபடுகின்றது; கன்னிச் சவ்வு விரியும் முன்னர் அதன் அளவு அரை அங்குலமே இருக்கும். மணமான பெண்ணிடம் அதன் அளவு ஒன்றரை முதல் இரண்டங்குலம் வரையிலும் இருக்கும். யோனிவாயைச் சுற்றியுள்ள இழையங்களும் மிகவும் நீண்டு சுருங்கும் தன்மையன. அவை கிட்டத்தட்ட நான்கு அங்குலம் வரையிலும் விரியக் கூடியவை. குழந்தையின் தலை வெளிவருவதற்கு இது மிகவும் துணையாகவுள்ளது. பிரசவம் முடிந்தபின்னர் இந்த வாய் பழைய நிலையினை அடைந்து விடும். (ii) கருப்பை : யோனிக் குழலின் மேலிருந்து பட்டையான முந்திரிப்பழம் போன்று நீட்டிக் கொண்டிருக்கும் உறுப்பே கருப்பையாகும். இஃது உறுதியான நார்த்தசையினாலானது. இது கருத்தரிப்பதற்கு முன்பு சுமார் முன்றங்குல நீளமும் இரண்டங்குல அகலமும், ஒர் அங்குல கனமும் உள்ளது. எடையில் ஏறக்குறைய ஒன்றரை அவுன்சு கொண்டது. கருப்ப காலத்துக் கருப்பை பன்னிரண்டு அங்குல நீளமும் ஒன்பது அங்குல அகலமும் எட்டு அங்குல கனமும் உள்ள பையாக விரிந்து கொள்கின்றது. எடையும் முப்பது அவுன்சாகப் பெருகி விடுகின்றது. கருப்பையை உடம்பு, கழுத்து என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மிகவும் அகன்ற பகுதியாகிய உடம்பு மேற்புறமும் குறுகிய பகுதியாகிய கழுத்து கீழ்ப்புறமும் உள்ளன. கழுத்து பகுதி யோனிக் குழனினுள் நீட்டிக் கொண்டிருக்கின்றது. இப்பகுதியின் அடிப்புறத்தின் நடுவில் கருப்பையின் வெளிப்புறவாய் அமைந்துள்ளது. இது மிகவும் சிறிய துவாரம், இத்துவாரத்தில் உட்புறமாக ஒன்றும் வெளிப்புறமாக ஒன்றுமாக இரண்டு வழுவழுப்பான மூடிகள் உள்ளன. கன்னிப் பெண்ணிடம் இவை மிக நெருங்கி