பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t26 தமிழில் அறிவியல் செல்வம் இணைந்திருக்கும். மாத விடாயின்பொழுது இந்த மூடிகள் சற்றுப் பிரிந்து நிற்கும்; அப்பொழுது சற்றுப் பெரிய வட்டமான துவாரம் காணப்பெறும். பிரசவித்த பெண்ணிடம் கருப்பையின் வாயின் விளிம்பு மேடுபள்ளமான மடிப்புகளைக் கொண்டிருக்கும். உடம்புப் பகுதியில் பக்கத்திற்கொன்றாக இருகருக் குழல்களின் வால்கள் வந்து முடிகின்றன. கருப்பையின் சுவர்கள் மிக நெருங்கி அமைந்துள்ளன.சுவர்களை வெளிப்புறமாக இழுத்துப் பிடிக்கும்பொழுதுதான் கருப்பையின் உள்ளே முக்கோண வடிவமுள்ள பை போன்ற இடம் உண்டாகின்றது. கருப்பையின் உட்புறம் உள்ள பிரத்தியேகமான சவ்வில் மிக அதிகமான குருதியோட்டம் உள்ளது. இச்சவ்வு ஒவ்வொரு மாதமும் அமைப்பில் மிகச் சிக்கலான மாறுதல்களை அடைகின்றன. இதுவே மாதவிடாய் எனப்படும். (ii) கருக்குழல்கள் : கருப்பையின் மேற்பாகத்தில் பக்கத்திற்கொன்றாக கொம்புகள் போன்று இரண்டு குழல்கள் உள்ளன. இந்தக் குழல்களின் தன்மைகளையும் செயல்களையும் முதல்முதலாக விவரித்துக் கூறியவர் ஃபெல்லோப்பியஸ் (Fellosopius) என்ற உடற்கூற்றியல் அறிஞர் (Anatomist). ஆகவே, அவர் பெயரால் அவை ஃபெலோப்பியன் குழல்கள் என்று வழங்கப்பெறுகின்றன. இவை முறையே ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஐந்தங்குல நீளம் உள்ளவை: சிறிய நாணற் குழல் அளவுள்ளவை. கருக்குழலின் சுவர்களும் மூன்றடுக்குகளால் ஆனவை. குழலின் உட்புறத்தில் மேற்பரப்பில் இருப்பது சளிச்சவ்வு; இச்சவ்வின்மீது பிசிர் cia போன்ற உணர்வுப் பகுதி அமைந்து அதற்கு மயிர்பட்டு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இதன் அடியிலிருப்பது தசையாலான இழையம்; இதற்குக் மேற்புறமாக இருக்கும் மெல்லிய மேலுறையே இடுப்புப் பகுதியின் சவ்வுடன் இணைக்கப் பெற்றுள்ளது. இவற்றின் முடிவுப் பகுதியில் இவை சற்றுப் பருத்துக் குஞ்சம் போன்ற பிரிவுகள் காண்ப்பெறுகின்றன; சூற்பையில் முட்டை பக்குவமாகி இருக்கும்போது இக்குஞ்சப் பகுதி சூற்பையின் அருகே