பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் . 127 நெருங்குகின்றது. சூற்பையில் உற்பத்தியாகும் பெண்கரு அணுவை (முட்டையை) இக் குஞ்சப் பகுதியும் கருக்குழலில் உற்பத்தியாகும் ஒரு திரவமும் கவர்கின்றன. இப்பெண்கரு அணு கருப்பையை நோக்கிக் கருக்குழலின் பிசிர் போன்ற உறுப்புகளின் உதவியால் நகர்ந்து வருங்கால் புணர்ச்சியால் வெளியேற்றப் பெறும் விந்தணுக்களைச் சந்திந்து அவற்றுள் ஒன்றால் கருவுறுகின்றது. கருவுற்ற அணு கருப்பையில் வந்து தங்குகின்றது. சூற்பையிலிருந்து வந்த முட்டை கருப்பையை வந்தடைய எட்டு நாட்களாகின்றன. சில சமயம் கருவுற்ற முட்டையின் பயணம் தடைப்பட்டு அது கருக்குழலின் சளிச்சவ்வில் புதைந்து விடுகின்றது. இது *@@gosi (5CIL3ási (Extra pregnancy or etopic pregnancy) முடிகின்றது. கருவுற்ற முட்டை இளஞ்சூலாக வளருங்கால் அது கருக்குழலை உடைத்து குருதிப் பெருக்கினை விளைவித்துப் பெண்ணை மரணத்திற் குள்ளாக்கி விடும். தக்க அறுவைச் சிகிச்கையால் இதனைத் தடுக்க வேண்டும். வெள்ளை போன்ற நோயினால் கருக்குழல் புண்ணாகி விட்டால் கருக்குழலின் மெல்லிய துவாரம் அடைபட்டுவிடும் அதனால் கருஅணு உள்ளே வரமுடியாம்ல் போகின்றது. வெள்ளை நோயினால் பிடிக்கப்பெற்ற பெண்களில் சிலர். மலடாகி விடுவதற்கு இதுவே காரணமாகும். . (i) சூற்பைகள் : கருக்குழலின் அருகே கருப்பைக்கு இருபுறமும் பக்கத்திற்கொன்றாக காணப் பெறுபவையே சூற்பைகள் (Ouaries) இவை கிட்டத்தட்ட உரிக்காத வாதுமைக் கொட்டை வடிவத்தைக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒன்றரை அங்குல, நீளமும் ஒரங்குல அகலமும் அரை அங்குலக் கனமும் உள்ளவை. ஆணின் விரைகளைப் போலவே இவையும் சில ஹார்மோன்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் பெண்ணின் உடற்செயற்களில் பெரும்பங்கு கொள்ளளுகின்றன. குற்பைகள் என்பவை ஆணின் விரைகளைப் போன்று பெண்ணிடம் அமைந்த உறுப்புகளாகும். இனப்பெருக்க t: