பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 தமிழில் அறிவியல் செல்வம் உறுப்பமைப்பில் இவையே முக்கியமானவை. சூற்பைகள் செயற்படுவதை அறியாமல் இனப்பெருக்கம், கருவுறுத்ல் முதலிய செயல்களைப் பற்றித் தெளிவாக அறிய முடியாது. குழந்தை கருவில் வளருங்கால் இனப்பெருக்க அணுக்கள் தனியே பிரிந்து இந்த சூற்பைகளில் வந்து தங்குகின்றன. பெண் இளமைப் பருவம் எய்தும்பொழுது இவை நன்கு முதிர்ந்து இனப்பெருக்கத்திற்குக் காத்து நிற்கின்றன. இந்த அணுக்களே பெண் கரு அணுக்கள் (Coa - முட்டைகள் என்று வழங்கப்பெறுகின்றன. ஒவ்வொரு சூற்பையிலும் குழந்தை பிறக்கும்பொழுது 30,000 கரு அணுக்கள் உள்ளன. பெண் பெரியவனாகி அவளது உறுப்புகள் யாவும் வளம் பெற்றுத் தாயாக ஆவதற்குத் தகுதி பெற்றதும் இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை குற்பைகளிலுள்ள கரு அணுக்களில் ஒன்று மெல்ல வளர்ந்து மேல் தோல் அருகில் வந்து தங்கிக் கொள்ளுகின்றது. கருவுறுதலுக்கேற்றவாறு அது முதிர்ச்சியடைந்ததும் மாதவிடாய் ஆன சில நாட்களுக்குப் பிறகு சூற்பையின் தோலைப்பிளந்து கொண்டு வெளியே வந்து கருக்குழலின் குஞ்சம் போன்ற பகுதியால் கவரப்பெற்றுக் கருப்பையை அடைகின்றது. ஒரு பெண்ணின் சூற்பையிலுள்ள பல்லாயிரக் கணக்கான கரு அணுக்களில் ஒரு சில நூறு அணுக்களே 400 அணுக்கள்) முழு வளர்ச்சியுற்றுப் பெண் கரு முட்டைகளாகின்றன. ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்வு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளே யாதலாலும் அவள் ஆண்டொன்றுக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று முட்டைகளையே வெளியேற்றக் கூடுமாதலாலும் அவள் தன் வாணாளில் வெளிப்படுத்தக் கூடிய முதிர்ச்சியடைந்த முட்டைகளின் எண்ணிக்கை நானுறுக்கு மேல் போவதில்லை என்பதை நாம் அறிதல் வேண்டும். х - இல்வாழ்க்கையின் - தியாகச் சின்னம் : இல்லற வாழ்க்கையில் பெண் ஒரு தியாகச் சின்னமாகத் திகழ்கின்றாள். இதற்கெனவே இயற்கையில் அவள் வாழ்வு அமைந்துள்ளது. .