பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 தமிழில் அறிவியல் செல்வம் அவளுடைய தோற்றத்திலும் மனநிலையிலும் உடல் அமைப்பிலும் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. சாதாரணமாகப் பத்தொன்பது இருபது வயதுவரை எந்த வயதிலும் பூப்பு எய்தலாம். கொங்கைகள் பருத்து உருண்டு நல்ல செழுமையை அடைகின்றன. இடுப்பெலும்புக் கட்டு நன்றாக வளர்ந்து உறுதியை அடைகின்றது. உடல் முழுவதும் பரவலாகக் கொழுப்பு படிந்து உடலுக்குச் செழிப்பான தோற்றத்தையும் தோலுக்கு ஒருவித மினுமினுப்பையும் நல்குகின்றது. பெண்குறியிலும் அக்குளிலும் உரோமம் முளைக்கத் தொடங்குகின்றது. உடல் மாறுதல்களைப் போலவே உள்ளத்திலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சிறுமியாக இருக்கும்பொழுது இருந்த களங்கமற்ற பார்வை, கபடமற்ற தன்மை, வெகுளித்தனம் முதலியவை மறைந்து அவற்றிற்குப்பதிலாகக் கூச்சம், நாணம் காமக் குறிப்புடைய நோக்கு முதலியவை யாவும் இளம்பருவப் பெண்ணிடம் வந்து குடிகொண்டு விடுகின்றன. பூப்பில் கோளாறுகள் : முதன்முதலாகப் பூப்பெய்தும் பெண்ணிடம் அவளது உறுப்பு அமைப்பின் காரணமாகக் குருதி சரியாக வெளிவராமல் அடைப்பட்டுக் கிடப்பதுண்டு. காரணங்கள் : (அ) யாதொரு தடையோ வலியோ இன்றிப் பூப்பெய்துவது. இதில் கன்னிச் சவ்வு திறந்த நிலையில் இருக்கும். (ஆ கன்னிச் சவ்வில் துவாரம் இல்லாத நிலை: இந்நிலையில் குருதியோனிக் குழலில் தேங்கிவிடும்.இத்தகைய பெண்ணின் கன்னிச் சவ்வில் மருத்துவர் செயற்கை முறையில் ஒரு துவாரம் செய்து விட்டால் உள்ளே அடைப்பட்டுக் கிடக்கும். குருதி வெளியேறிவிடும். (இ) கன்னிச்சவ்வு தடித்த தசையாலாகியிருப்பது இதிலும் குருதி யோனிக்குழலில் தேங்கிவிடும். இஃது ஆபத்தினை விளைவிக்கக் கூடியது. தக்க மருத்துவரைக் கொண்டு