பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 133 மாதவிடாய் ஆன நான்காம் நாளிலிருந்து தொடங்கிப் பதினைந்து நாட்கள் வரை கருப்பையில் உட்புறத்தோல் மெதுவாக உப்பித்தடித்துக் கொள்ளத் தொடங்குகின்றது. இவ்வாறு தடித்துக் கொண்ட தோலின் கீழ்ப் பரவியுள்ள குருதிக் குழல்களில் குருதியோட்டம் அதிகம் ஏற்படுகின்றது. தொடக்கத்தில் கால் அங்குலக் கனத்திற்குக் குறைவாக இருந்த எண்டோமெட்ரியம் அடுத்த முறை நிகழும் மாதவிடாய் நாளுக்கு அரை அங்குல அளவு நன்றாகத் தடித்துப் பஞ்சனைபோல் மிருதுவாகி விடுகின்றது. பெண்ணின் முட்டையணு கருவுற்றல் மேற்படி கருவை வரவேற்றுக் காப்பதற்காகவே கருப்பையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு பெரிய அரசர் அல்லது முக்கிய விருந்தினர் நம் வீட்டிற்கு வந்தால் நாம் இரத்தின கம்பளம் விரித்து அவரை வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது போன்று கருப்பையின் உள்ளே இத்தகைய முன்னேற்பாடுகள் இயற்கையாகவே நடைபெறுகின்றன. கருப்பையில் இவ்வாறு வரவேற்பிற்குரிய ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது சூற்பையில் முதிர்ச்சியுற்றுப் பக்குவமான முட்டையணு கருக் குழலில் வந்து தயாராகத் தங்கக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் புணர்ச்சி ஏற்பட்டால் விந்தணுக்கள் நீந்திவந்து கருக்குழலை யடைகின்றன. அவற்றுள் வன்மையான விந்தணு ஒன்று முட்டையணுவைத் துளைத்து அதனுடன் கலந்து அதனைக் கருவுறச் செய்கின்றது. கருவுற்ற முட்டை சில நாட்கள்தாம் - சுமார் எட்டு நாட்கள் - கருக் குழலில் தங்கியிருக்கும். அதற்குப் பிறகு அங்கே அது வளர இடம் இல்லையாதலின் அங்கிருத்து பெயர்ந்து இறங்கிக் கருப்பையை வந்தடைகின்றது. அங்ஙனம் வந்த கரு அணு கருப்பையில் தயாராக இருக்கும் பஞ்சணை போன்ற உட்புறத் தோலில் தன்னைப் பதித்துக் கொண்டு வளரத் தொடங்குகின்றது. பஞ்சணையயையும் தொடர்ந்து வளர்ந்து