பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழில் அறிவியல் செல்வம் கருவுற்ற முட்டையின் வளர்ச்சி : கண்ணுக்குப் புலனாகாத மிகச் சிறிய இரண்டு உயிரணுக்களின் சேர்க்கையால் கருவுற்ற முட்டை குழந்தை உருவம் அடைவது வியப்பினும் வியப்பேயல்லவா? கருப்பையை அடைந்த கரு அணு இரண்டாகி இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி இவ்வாறு பல்கிப் பெருகிப் போகும் அணுக்கள் இரண்டு வார காலத்தில் கோடிக்கணக்கானவைகளாகி ஒன்றோடென்று சேர்ந்து ஒரு சிறு பந்து போன்ற தோற்றத்தை அடைகின்றன. இதனைக் 'கருப்பந்து Bag of cells என்று வழங்குவர். இந்நிலையில்தான் அது கருக்குழலிருந்து கருப்பையை அடைகின்றது. இதன் அளவு இப்போது ஒரு குண்டுசியின் தலையளவு இருக்கும். சுமார் இரண்டு வார காலம் கருவுற்ற முட்டை கருப்பையில் ஒட்டாமல் வளர்ந்து வருகின்றது. இதனை முளைச்சூல்நிலை (Geாய்ialstage) என்று வழங்குவர். இரண்டு வாரகாலத்திற்குப் பிறகு கரு கருப்பையில் ஒட்டிக் கொண்டு வளரத் தொடங்குகின்றது. ஒட்டிக் கொண்ட இடத்தில்தான் நஞ்சும் (Placenta) கொப்பூழ்ச் கொடியும் (Umbia.or)வளர்கின்றன. கொப்பூழ்க் கொடியின் மூலம்தான் கரு தாயினிடமிருந்து உணவூட்டம் பெறுகின்றது. இதுவே இரண்டாவது நிலை: இது பிண்டநிலை அல்லது இளஞ்சூல் நிலை (Embryonicstage) என்று பெயர் பெறும் இந்நிலையில் முளைச்சூல் உருவம் பெறாது இரண்டு திங்கள் வரை வளர்ந்து வருகின்றது. இரண்டாவது நிலையின் தொடக்கத்தில் பந்துபோல் உருவம் பெற்ற கருப்பந்திலுள்ள எல்லா அணுக்களும் சிசு அல்லது முதுசூல் நிலை (Retal stage ಛಿip மூன்றாவது நிலையை அடைந்து விடுவதில்லை. அவற்றில் சில அணுக்கள் மற்றவற்றினின்றும் பிரிந்து குழந்தையின் உடலமைக்கும் பணியில் ஈடுபடுகின்றன. மிகத் தொடக்கநிலையில் மூன்று அடுக்குகளில் (புர்ைகளில் உயிரணுக்கள் அமைகின்றன. அவை அமைப்பிலும் உருவத்திலும் பாகுபாடு அடைகின்றன.