பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு மக்களின் தோற்ற வேறுபாடுகள் பற்றி விளக்கும் கால்வழிஇயல் (Gentics) பற்றிய செய்திகளும் விளக்கம் அடைந்தன. அறையில் கேட்கப்பெறும் செய்திகள் அம்பலத்துக்கு வந்தால்தான் அறக்கட்டளை நிறுவிய அன்பரின் நோக்கம் முற்றிலும் நிறைவேற்றப்பெற்றதாக அமையும், மூன்றாண்டுகட்கு மேல் பிறந்தமேனியாகக் கிடந்த இந்த அறிவியல் குழந்தையை வெளியுலகில் நடையாடவிட்டது மணிவாசகர் பதிப்பகம். காலத்திற் கேற்ற கோலமாகப் பல்வேறுவகை நூல்களை வெளியிட்டுத் தமிழ்வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டுவரும் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் டாக்டர். ச. மெய்யப்பன் அவர்கள் இந்தச் சொற்பொழிவுகளின் கையெழுத்துப் படியை அன்புடன் ஏற்று அச்சுப் படியாக்கினமைக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. இந்தநூல் அச்சாகும்போது மூலப்படியுடன் பார்வைப் படிவங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்து உதவிய என்_அபிமான புத்திரி டாக்டர். மு.ப.-சியாமனாவுக்கு என் அன்பும் ஆசியும் கன்ந்த நன்றி. - இந்த அறிவியல் நூலுக்கு அணிந்துரை அருளியவர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அருள்தந்தை டாக்டர் ச. இன்னாசி முத்து அவர்கள். இயேசு சபையைச் சார்ந்த கிறித்தவ சந்நியாசியாகிய இப்பெருமகனார் அறிவியல் கற்று அத்துறையில் எம்.எஸ்சி. பிஎச்.டி. டி.லிட் பட்டங்கள் பெற்றுத் திகழ்பவர். இயேசுநாதரிடம் கொண்ட பக்தி ஒருபக்கம் இருந்தாலும் தமிழின்பாலும் அறிவியலின்பாலும் ஆராக் காதல் கொண்டவர். பணியே பரமன் வழிபாடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் கண்கண்ட தொண்டர், விருப்பு வெறுப்பற்ற முறையில் சமூகநலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருபவர். என் வீர வழிபாட்டுக்குரியவர். கலை ஆர்வமும் பண்பட்ட பரிவும் கொண்டு பணியாற்றிவரும் அறிவியல் மேதையாகிய சந்நியாசிப் பெருமகனாரிடம் அணிந்துரை பெற்றது இந்நூலின்பேறு கிட்டத்தட்ட வாழ்க்கை யின் இறுதிக்கட்டத்தில் அகவை 87 அவரின் கீழ்ப்பணியாற்றும் என் பேறுங்கூட அணிந்துரை அருளிய அருள்தந்தை அவர்கட்கு என் இதயங் கனிந்த நன்றி என்றும் உரியது. - அறிவியல் மேதை பாரத ரத்னா டாக்டர்.எ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் சகோதரத்துவத்தை உலகிற்குப் பிரகடனம் செய்த