பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f36 தமிழில் அறிவியல் செல்வம் இந்திலையில் குழந்தையின் பால் (ஆனா? பெண்ணா?) இன்னதெனக் கூறிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து நாற்பதாவது வாரம் வரையில் (பத்து மாதம்) வளர்ச்சி நடைபெறுகின்றது. பிறக்கும் நிலையில் குழந்தை முப்பது அங்குல நீளமும் கிட்டத்தட்ட ஏழு பவுண்டு எடையும் உள்ளது. இங்கனம் ஒன்பது மாதத்திற்குள் ஒற்றையணு கோடிக்கணக்கான அணுக்களைக் கொண்ட உடலாக வளர்ந்து விடுகின்றது. தாய் கருவுயிர்க்கும் காலத்தில் குழந்தை கருப்பையில் தே ராகத் தொட்டு க் கொண் டி ரு ப் பதில் ைல; தொடக்கத்திலிருந்தே பாய்மம் நிரம்பிய பையில் (amniotic s: குழந்தை துனாவிக் கொண்டு வளர்ந்து வருகின்றது. இந்தப் பணிக்குடத்தில் உண்டாகும் நீரும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். இந்த நீர் குழந்தையின் பாதுகாப்பாக அமைந்திருப்பதுடன் அதற்கு யாதொரு அதிர்ச்சியும் ஏற்படா வண்ணம் காக்கின்றது. நஞ்சுக் கொடி: தாயின் கருப்பையில் குழந்தை இருக்கும்பொழுது குழந்தைக்கு உணவு எப்படி? அதுதான் ஆண்டவன் படைப்பின் விந்தையாகும். - - கருப்பையில் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் விருப்புற் றழுதளிக்கும் மெய்யன்” என்ற தனிப்பாட்டடிகளில் இதற்கு விடை கிடைக்கின்றது. தாயையும் சேயையும் இணைக்கும் நஞ்சுக்கொடி என்ற பகுதி மூலம் கிடைக்கின்றது. இப்பகுதியில் தான் தாயின் குருதியும் சேயின் குருதியும் இரண்டறக் கலக்கரமல் சித்தாந்தத் தத்துவம்போல் மிக நெருங்கியுள்ளன. கொப்பூழ்க் கொடி த யி ன் 'கு ரு தியோ ட் டத் ைத யும் சே யி ன் குருதியோட்டத்தையும் பிரிக்கின்றது. குழந்தை தாயிடமிருந்து இக்கொடியின் மூலம் ஊட்டப் பொருள்களைப் பெறுகின்றது. கழிவுப் பொருள்களைத் தாயிடம் அகற்றிவிடுகின்றது தாய்கருவுயிர்த்ததும் கொப்பூழ்க் கொடியை நறுக்கித் தாயின் இணைப்பிலிருந்து புனிற்றிளங் குழவியைப் பிரிப்பர்.