பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 139 என்னும் நோய் ஏற்பட்டு பெண்ணின் இடுப்பெலும்புக்கட்டு மிகவும் சிறுத்து வாயும் குறுகி விடும். இத்தகைய பிரசவங்களை சிசேரியன் முறையைக் கையாண்டுதான் செய்யப் பெறல் வேண்டும். (ஆ) சில சமயம் குழந்தை வேறு நிலையிலும் இருந்து முதலில் முகம் கை அல்லது கால், ஆசனம் என்ற முறையில் உதயம் ஆவதுமுண்டு. இத்தகயை பிரசவங்கள் அடிப்புறப் பிரசவங்கள் (Breact delieries என்று வழங்கப் பெறுகின்றன. சில சமயம் குழந்தை கருப்ப காலத்தில் பெரும்பான்மையான பகுதியில் அடிப்புறப் பிரசவ நிலையிலேயே இருந்து பிரசவ காலம் நெருங்கும்பொழுது தன் நிலையை மாற்றிக் கொண்டு தலை முதலில் வெளிவரும் நிலையை அடைவதும் உண்டு. கருப்பையில் குழந்தையின் தலை மேலாகவும் ஆசனம் கீழாகவும் தங்கியிருந்தால் பிரசவம் முதலில் வெளிப்படுவது ஆசனமாகவே இருக்கும். இஃது ஆசன உதயம் என்று வழங்கப் பெறும். குழந்தை இம்மாதிரி இருப்பதற்குக் காரணம் ஒன்றும் கூறமுடியாது. இம்முற்ையில் முதலில் ஆசனம், கால்கள், உடல், கைகள், இறுதியில் தலை என்று உறுப்புகள் முறையே வெளிப்படுகின்றன. இம்முறையில் பிரசவம் எப்பொழுதும சுகமானதாகவே இருக்க முடிவதில்லை. குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்திருந்தாலும் இடுப்பெலும்புக் கட்டு சிறிது குறுகியிருந்தாலும் முதல் பிரசவத்தில் ஆசன உதயப் பிரசவம் சிரமமாகி விடுகின்றது. இதில்தாயை விட் சேய்க்குத்தான் ஆபத்து அதிகம். குழந்தை வெளிப்படுங்கால் முதலில் கால்களும் உடலும் வெளிப்படுகின்றன. வெளிப்புறக் காற்று சில் என்று குழந்தையின் உடலில் தாக்கியதும் குழந்தை உள்ளே சுவாசிப்பின் கருப்பையிலுள்ள பனி நீர் முக்கு வாய் வழியாக சுவாசக் குழலுக்குள் சென்று குழந்தைக்கு மூச்சுத் திணறலை உண்டாக்கி இறப்பையும் விளைவித்துவிடும். சிலசமயம் கழுத்துவரை பிரசவம் எளிதாக ஏற்பட்டுத் தலை வெளிவராது உள்ளேயே சிக்கிக் கொளவதுமுண்டு நீண்ட