பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழில் அறிவியல் செல்வம் நேரம் தலை வெளிவராது உள்ளேயே தங்கி விட்டால் கருப்பையின் வாய் அழுத்தமாகிக் குழந்தையின் கழுத்தின்மீது சுருங்கி விடுகின்றது. இறுக்கமான கயிற்றால் கழுத்திலே துக்கு போட்டது போல் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அஃது இறக்கவும் நேரிடுகின்றது. தொடக்கத்திலேயே இந்நிலையைப் புதிர்க்கதிர் (X-rags மூலம் சோதித்து இடுப்பெலும்புக் கட்டையும் கவனித்திருந்தால் பிரசவ வேதனை எடுக்கும் முன்பே 'சிசேரியன் அறுவை முறை மூலம் குழந்தையை உயிருடன் வெளிப்படுத்தித் தாயையும் சேயையும் காப்பாற்றி விடலாம். (இ) ஆயுதப் பிரசவம் : சிரமமான பிரசவத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்திப் பிரசவத்தை நடத்தும் முறையே ஆயுதப் togersuub (Instrumental delivery) Grcitu žil. 3) bypsopustei கையாளப்பெறும் ஆயுதத்திற்கு ஃபோர்செப்ஸ் (Forceps என்று பெயர் ஃபோர்செப் என்ற ஆங்கில சொல் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது; இதற்கு இரண்டு நாக்குகள் என்பது பொருள். இந்தக் கருவி இருபெருந்தேக்கரண்டிகள் கைப்பிடியில் இணைக்கப் பெற்றவை போன்று செய்யப் பெற்றுள்ளது. தற்காலத்தில் மருத்துவநிலையங்களில் பயன்படும் கருவி குழந்தையின் தலை நன்கு பொருந்துமாறு உள்வளைவுள்ள இரண்டு தகட்டினால் ஆனது: இவற்றால் தாய்க்கும் சேய்க்கும் எந்தவித விபத்தும் நேரிடாது. பிரசவத்தின் முதல்நிலையில் இக்கருவியைப் பயன்படுத்த முடியாது. இரண்டாவது நிலையின்பொழுதுதான் இது கையாளப் பெறுகின்றது. குழந்தையின் தலை நன்றாகக் கீழிறங்கிப் பனிக்குடம் உடைந்து கருப்பையின் வாய் முழுவதும் விரிந்து தலை யோனிக்குழலில் இறங்கும் நிலையில் நல்ல வலி இல்லாததனால் குழந்தை பிறக்கத் தாமதம் ஏற்பட்டால் மருத்துவர்கள் இக் கருவியைப் பயன்படுத்துவர். கருப்பையின் வாய் நன்றாக விரிந்து கொள்ளாவிடினும், பனிக்குடம் உடையாவிடினும் இக்கருவியைப் பயன்படுத்த முடியாது.