பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 14? மானிடப் பிறப்பு மருத்துவ உலகில் ஒரு காவியம் போன்றது. காலச் சுருக்கம் கருதி கருப்பகாலம், கருப்பகாலச் சின்னங்கள், மருத்துவர் சோதனைகள் கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், நச்சு வாந்தி, வலிப்பு, கருவுயிர்த்தலில் பல நிலைகள், கருப்பைக் கோளாறுகள், பிரசவ பாகத்தில் கோளாறு, சிசேரியன் செக்ஷன் விவரம் முதலிய செய்திகளை விளக்க முடியவில்லை. குடும்பக் கட்டுபாடு முக்கியமான பகுதி. அதுவும் விடப்பெற்றது. இன்னும் நான்கு மணிநேரம் இருப்பின் இவற்றை யெல்லாம் விளக்க முடியும். சூதக ஒய்வு : கிட்டத்தட்டப் பெண்ணின் பதின்மூன்று வயதில் தொடங்கும் மாதவிடாய் அவளது நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதில் நின்று போகின்றது. இதனைச் 'சூதக ஒய்வு (Menopause) என்று வழங்குவர். சிலருக்கு ஐம்பதுக்கு மேலும் ஒழுக்கு ஏற்படும். சிலருக்கு முப்பத்தைந்து வயதிலேயே நின்று விடுவதும் உண்டு. மாதவிடாய் நிற்றலுடன் குழந்தை பெறும் செயலுக்கு முடிவு ஏற்படுகின்றது.இது பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும். 2. sarsi suĝ ĝwsi (Genetics) இப்பூவுலகமும் அதிலுள்ள உயிர்களும் ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் உண்டாகின்றன. இந்த உயிர்களின் உடல் பெரியதாகிப் பல்லாண்டுகள் வாழ்த்து தம் இயற்கைக் கடன்களை ஆற்றித் தம் இனத்தைப் பெருக்கி முதுமை அடைந்து அழிந்து, பழையபடியே ஐம்பெரும் பூதங்களாகவே மாறிப் போகின்றன. இங்கனம் தொடர்ந்து நடைபெற்று வரும் உயிர்ச் சக்கரத்தின் நியதிகளை உன்னுந்தோறும் நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகின்றன. இங்ங்ணம் இயற்கையன்னை தொடர்ந்து புரிந்து வரும் திருவிளையாடல்கள் எண்ணற்ற்வை. எந்த எல்லைக்குள்ளும் அடங்காதவை. படைப்பின் விந்தைகள் ஒன்றா? இரண்டா? எத்தனையோ? - -