பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழில் அறிவியல் செல்வம் "பார்வதியின் குழந்தையைப் பார்த்தாயா? தந்தையை அப்படியே உருக்கி வார்த்து வைத்ததுபோல் உள்ளது என்று அடுத்த வீட்டுப் பாட்டி சொல்வதைக் கேட்கின்றோம். "தாய்க்கு இருப்பனபோலவே பெரிய கண்கள், நிறமும் அவளைப் போலத்தான். முக்கைப்பார். தந்தை யினுடையதைப் போல் அமைந்துவிட்டது - இப்படிப் பேச்சு நடக்கின்றது. இன்னொரு வீட்டில்! "கோடித் தெரு குப்புசாமி வீட்டில் வேலைக்காரி ஒருத்தி இருக்கின்றாள். அவள் அசடு. அழகோ எட்டேகால் இலட்சணம். அவளுடைய கணவனும் அப்படித்தான். பார்ப்பதற்கு விகாரமான உருவமுடையவன். குப்பைமேட்டில் இரத்தினம் கிடைத்தது மாதிரி அவர்கட்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். திருமகளே அவதாரம் செய்தது போல் மூக்கும் முழியுமாக இருக்கின்றாள் - இப்ப ஒரு திண்ணைப் பேச்சு கேட்பவர்கள் வாய்பிளக்க வியப்புடன் கேட்டு மகிழ்கின்றார்கள். ★ 寅 责 காங்கேயம் காளையின் கம்பீரத் தோற்றம் கண்ணுக்கு இனிதாக உள்ளது. "தோள்கண்டார் தோளே கண்டார்” என்பதுபோல் நாம் அதன் திமிள் அதன் கொம்புகள், அதன் கம்பீரமான நடை இவற்றில் நம் மனத்தைப் பறிகொடுக்கின்றோம். ஆனால் சுமார் நூறு ஆண்டுகட்கு முன்னர் அக்காளை இன்றிருப்பதுபோல் அவ்வளவு அழகாக இருக்கவில்லையே. அதன் கொம்புகளும் பிறஉறுப்புகளும் பிற வு ம் இ ன் று இரு ப் ப ன போ ல் அ ன் று அமைந்திருக்கவில்லை. இவையெல்லாம் வேறு இனச் சேர்க்கையினால் ஏற்பட்ட விந்தையாகும். 女 女 ★ ஆந்திர மாநிலத்தில் பல அருமையான மாங்கனிகள் உள்ளன. பங்கனபல்லியின் சுவையை அறியாதார் யார்? அதனை உண்டவர்கள் வானமிழ்தம் இப்படி இருக்குமா?" என்று வினவுகின்றார்கள். . .