பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 - தமிழில் அறிவியல் செல்வம் அடையலாம். சில குழவிகள் உள்ள சில குடும்பங்களைப் பார்க்கின்றோம். ஏதாவது ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு குழந்தை படித்துப் பல்கலைக் கழகத்தில் பல பட்டங்கள் பெற்று அனைத்தையும் ஓரளவு ஐயந்திரிபறக் கற்று அறிஞனாகின்றது. மற்றொரு குழந்தை உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்ட முடியாமல் திண்டாடுகின்றது. தீயவழிகளில் சிந்தையைச் செலுத்தித் தான் பிறந்த குடும்பத்திற்கே இழுக்கைத் தேடுகின்றது. அதே குடும்பத்தில் இன்னொரு பெண் குழவி திருமகளைப் போல் வனப்புடன் வளர்ந்து இசை, நாட்டியம் போன்ற கலைகளில் கொடுமுடிகளை எட்டி விடுகின்றது. இங்ங்னம் எத்தனையோ விதமான வேறுபாடுகளுடன் ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களைக் காண்கின்றோம். ஆனால், இக்குழந்தைகளைப் பெற்றெடுத்தத் தாய்தந்தையர்கட்குக் கல்வியறிவு கூட இருப்பதில்லை. ஏதோ ஒரு சிற்றுாரில் உழவுத் தொழிலால் வாழ்க்கையை நடத்தி நகர வாழ்க்கையையே அறியாதவர்கள்தாம் இவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த மேற்குறிப்பிட்ட குழவிகளும் இத்திறன்கள் யாவும் மரபு வழியாகப் பெறப்பட்டனவா? அல்லது குடிவழியால் அமைந்தனவா? நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல் தாகும் அறிவு என்ற வள்ளுவர் கூற்றின் பொருள்தான் என்ன? பல கல்விமான்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் பண்டித புத்திரன்' என்ற பட்டத்தைச் சிலர் பெறுவதற்குக் காரணம் என்ன? ஊர்வசி போன்ற அழகுடைய மடமங்கை ஒருத்திக்குப் பெரிய அம்மை நோய் ஏற்பட்டு மிகவும் விகார உருவத்தை அடைகின்றாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் அழகுடன் இருந்தபொழுதும் அவள் அழகினை இழந்த பிறகும் பெற்றெடுத்த குழந்தைகளிடம் வேறுபாடுகள் காணமுடியுமா? ... - 2. குறள் - 452.