பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் . 145 முப்பது வயதுக்குக் கீழ் இருக்கும்பொழுது ஒருவருக்குப் பல குழந்தைகள் பிறக்கின்றன. ஐம்பது வயதை எட்டிய பிறகும் அவருக்கு மீண்டும் சில குழவிகள் பிறக்கின்றன. இத்தகைய குழவிகளிடம் உடற்கூறுகள் திறன்கள் அறிதிறன்கள் முதலியவற்றில் வேறுபாடுகள் காணப் பெறுமா? அப்படிக் காண நேர்ந்தால் அதற்குக் காரணங்கள் யாவை? இக்கூறியவாறு மக்களிடம் மரவு வழியாகச் சில பண்புகள் பல்வேறு கோலங்களில் இறங்கி வருவதற்குக் காரணம் என்ன? இவ்வாறு இறங்கி வரும் சில பண்புகளைச் சூழ்நிலையால் மாற்றி யமைக்க முடியுமா? எந்த அளவிற்கு மாற்றியமைக்க முடியும்? இயற்கை அமைப்பில் இனமாற்றம் நிகழ்வதில்லை. மக்கள் இனத்தில் மக்களே தோன்றுகின்றனர். பறவை இனங்கள், விலங்கு இனங்கள், பூச்சி இனங்கள் இவற்றில் அந்தந்த இனங்களே தோன்றுகின்றன. இங்கனம் உயிரினங்களின் வகை மாறாமல் வாழையடி வாழையாக இருந்து வருவதற்குக் காரனம் என்ன? - . . - வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் மரபினில் யான் ஒருவன் அன்றே?" என்று வள்ளற் பெருமான் பாடியுள்ளாரல்லவா? அவர் குறிப்பிடும் மரபு' என்பதற்கு பொருள் என்ன? அதனை 'மரபுவழி (Hereditழி என்று குறிப்பிடலாமோ? இங்ங்ணம் மரபுவழி முறைகளில் இயற்கை அன்னை புரிந்து வரும் அருஞ்செயல்கள் அற்புதச் செயல்கள் - கோடானு கோடி படைப்பின் விந்தையை ஏதோ ஒரளவு அறிவியலறிஞர்கள் அறிந்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் கற்றது கைமண் அள்வு கல்லாதது உலகளவு உள்ளது. இங்ங்னமே வாழையடி வாழையாக வரும் இயற்கையன்னையின் திருவிளையாடல்களை ஒருசில இரகசியங்களை ஒரளவு அறிந்து கொள்ளமுயல்வது இன்றைய பேச்சு. 3. திருவருட்பா - ஆறாந்திருமுறை - பிரியேன் என்றல் செய். 4.