பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நபிநாயகத்தின் சமயத்தைத் தழுவியவர். உலகமக்கள் அனைவரையும் 100 விழுக்காடு சகோதரர்களாகப் பாவித்துவரும் ஒழுக்கசீலர், மரக்கறி உணவு உண்பவர், புலாலைத் தவிர்த்தவர். இத்தகைய பெருமகனார் மக்களாட்சி நடைபெற்று வரும் நாட்டின் தலைவராக குடிமக்களின் தலைவராக - தேர்ந்தெடுக்கப் பெற்றதை நினைந்து நாடே - ஏன் உலகமே - பெருமிதம் கொள்ளுகிறது. இந்த நூலை எழுதிய காலத்திலேயே இவருக்கு அன்புப் படையலாக்கக் கருதினேன். அக்கருத்து இன்று நடைமுறைக்கு வருவதால் பெருஞ்சிறப்பு அடைகின்றது. நூல் எழுதியவர் பலதுறை அறிவியல் கற்றுத்தெளிவு பெற்றவர். அணிந்துரை அருளிய அருள் தந்தையோ அறிவியல் கற்று அதனால் ஆய்வுப் பட்டங்களைப் பெற்ற அருங்கலை விநோதர். நூலை அன்புப் படையலாகப் பெறுபவரோ உலகம் நன்கறிந்த இராக்கெட்டு அறிவியல் மேதை. இந்த மூன்று பெருமைகளையும் பெறுகின்றது தமிழில் அறிவியல் செல்வம்'. வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இத்தகைய அரிய நூலை வரையவும், அதனைச் சொற்பொழிவுகளாக எதிர்காலத் தலைவர்களாக வரக்கூடிய மாணவர்கள் முன்னர் நிகழ்த்தவும், அவை நூல்வடிவாக வெளிவரவும் என் இதயத்தில் நிரந்தரமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் வேங்கடம் மேவிய விளக்கிற்கு அருள்வடிவமாய் புருஷகார பூதையாய்ச் செயற்படும் பெரிய பிராட்டியார் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள். புல்லும் பகவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம்: - தொல்லுலகில் ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர் வாழும் வடிவேல வன்' - - கவிமணி வேங்கடம்' AD-13, அண்ணாநகர், இங்ங்னம், சென்னை - 600 040, ந. சுப்புரெட்டியார் #3–9–2002 - தொ.பே; 621583 (விநாயகர் சதுர்த்தி 3. மலரும் மாலையும் - முருகன் புகழ்மாலை-1