பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழில் அறிவியல் செல்வம் (1) கரு - உயிரணுக்கள் : இன்றைய முற்பகல் பொழிவில் உயிரணுப் பிரிவைப் பற்றி கூறினேன். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அவை நகம், மயிர், எலும்பு, தசை, தசைநார் முதலிய அணுக்களாக மாறிச் செயற்படுகின்றன எனச் சுட்டி உரைத்தேன். ஒரு குறிப்பிட்ட பருவம் வரை இவ்வாறு பாகுபாடடைதலும் பல்கிப் பெருகுதலும் நடைபெறும் ஒரு நிலையில் சந்ததிப் பெருக்கத்திற்கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள உயிரணுக்கள் ஒதுக்கப் பெறுகின்றன. இவையே கரு உயிரணுக்கள் (Germ cells) என வழங்கப்பெறுகின்றன. இவை ஆணின் விரைகளிலும் (Testes) பெண்ணின் குற்பைகளிலும் (Ouaries) தங்குகின்றன. இந்த அணுக்கள்தாம் வாழையடி வாழையாக மானிட இனத்தை நிலை பெறச் செய்கின்றன. இவற்றிலிருந்தே விந்தணுக்களும் முட்டையணுக்களும் முதிர்ச்சியடைகின்றன. இவற்றை முறையே விந்தணுவின் தாய் உயிரணுக்கள் (Speாாothe cel9 என்றும் முட்டையணுவின் தாய் உயிரணுக்கள் (Eggாothercells) என்றும் கூறலாம். இவ்வனுக்கள் முதிராத நிலையில் தனிப்பட்ட உயிரணு வகைகளாகப் பாகுபாடமையாத உடலனுக்களைப் (Somatic cells போலவே அமைப்பிலும் தன்மையிலும் காணப்பெறுகின்றன. இவை ஆணின் முன் - குமரப்பருவம் வரையிலும் பெண்ணின் பூப்படையும் பருவம் வரையிலும், பாற்கடலில் பரந்தாமன் அறிதுயில் கொண்டு கிடப்பதைப்போல், அப்படியே வாளா கிடக்கின்றன. (அ) பிரியும் முறை : இந்த இனப்பெருக்க உயிரணுக்கள் ஆணின் முன் குமரப்பருவத்தில் விந்தணுக்களாக முதிரும் பொழுதும் பெண் பூப்படையும் காலத்தில் முட்டைகளாக முதிரும் பொழுதும் இவை புதியதொரு முறையில் பிரிகின்றன. இவ்வாறு பிரியும் முறை உடலின் உயிரணுக்கள் பிரிவதினின்றும் முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வோர் உயிரணுக்களிலும் 46 நிறக்கோல்கள் (Chromosomes) உள்ளன என்பது உயிரியல் உண்மை. இவை 23 இணைகளாக 4. வாழையடிவாழை பக் 15. படத்துடன் அழகாக விளக்கப் பெற்றுள்ளது.