பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೭೧ಗಿuಟು GB ಹ೩ನು 147 அமைந்துள்ளன. ஒவ்வொரு இணையிலும் உள்ள நிறக்கோல்கள் உருவம், நீளம், பொது அமைப்பு போன்ற கூறுகளில் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், இக்கூறுகளில் ஒர் இணை நிறக்கோல்கள் மற்றோர் இணை நிறக்கோல்கள்போல் இரா. இணையாகும் நிறக்கோல்கள் ஒத்துள்ள நிறக்கோல்கள் என்று வழங்கப் பெறும். இவற்றுள் ஒன்று தந்தை வழியிலும், மற்றொன்று தாய் வழியிலும் வந்தவையாகும். இந்தக் கரு-உயிரணு பிரியுங்கால் ஒவ்வொர் இனையிலுமுள்ள ஒரு நிறக்கோல் தனியாகப் பிரிந்து 23 திறக்கோல்கள் அடங்கிய ஓர் அரைப்பகுதியாகவும் ஒவ்வோர் இணையிலுமுள்ள மற்றொரு நிறக்கோல் தனியாகப் பிரிந்து 23 நிறக்கோல்கள் அடங்கிய மற்றோர் அரைப்பகுதியாகவும் போகின்றன. அஃதாவது, இரண்டாக பிரிந்த ஒவ்வொரு கரு - உயிரணுவிலும் ஒவ்வோர் இனையிலுமிருந்து வந்ததிறக்கோல்கள் அடங்கியுள்ளன. இம்முறையைக் குறைத்துப் பகுத்தல் Racisin-Miss என்று வழங்குவர். (ஆ) இம்முறையின் இன்றியமையாமை : ஒவ்வொரு இணையிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்களே உள்ளன. எடுத்துக்காட்டாக டிரோஸாபிலா’ என்ற ஒரு வகை ஈயின் உயிரணுவில் 4 இணைக்ளும், எலியின் உயிரணுவில் 20 இணைகளும், மானிட உயிரணுவில் 23 இணைகளுமே உள்ளன. உயிரியல் வகை மாறாமலிருப்பதற்கு வேண்டும். * . . . . . . . . ; 3. . . . . . . " இவண் குறிப்பிட்ட குறைத்துப் பகுத்தல் செயல் இல்லையாயின் விந்தனு அல்லது முட்டைய 46 நிறக் கோல்களைக் கொண்டிருக்கும் முறை மாறி அமையும். கருவுற்ற முட்டையின் உயிரணுக்களில் 92 நிறக்கோல்கள் அமைந்துவிடும் அடுத்த பரம்பரை 184 நிறக்கோல்களிலும், அதற்கு அடுத்த பரம்பரை:368 நிறக்கோல்களிலும் இவ்வாறு 函·11。