பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 . தமிழில் அறிவியல் செல்வம் கூட தம்முடைய ஆண் குழவிகட்குச் 'aéro#g' (Circumcision) செய்வதாலும், சில காட்டுமிராண்டிகள் தம் குழவிகளின் முகத்தைச் சிதைத்து உருவத்தை மாற்றிய போதிலும், அவர்களின் சந்ததியினரிடையே யாதொரு மாற்றத்தையும் விளைவிப்பதில்லை. (ஆ) மரபுவழி முறையில் இயற்கையன்னை பல வியத்தகு செயல்களைப் புரிகின்றாள். ஆனால் நம்டைய படிப்பினாலும் உழைப்பினாலும் ஏற்படும் அநுபவங்கள் நம்முடைய பெருமூளையில் சுவடுகளாக அமையும் பொழுதெல்லாம் நம்முடைய வளப் பொறியமைப்பிற்குக் காரணமாகவுள்ள ஒவ்வொரு ஜீனும் இதற்கேற்ற மாற்றங்களைப் பெறுவதில்லை. அங்ங்னமே யோகாசனப் பயிற்சியாலும், கசரத் பயிற்சியாலும் நம்முடைய உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் உடலில் தசைக்கட்டுச் செய்வில் பங்குபெறும் ஜீன்கள் தம்முடைய ஆற்றலில் உயர்வடைவதில்லை. . . ... . . . . இ) நம்முடைய தந்தை ஒரு சிறந்த குடிமகனாகத் திகழலாம்; அல்லது அகதி'யாகவும் திண்டாடலாம். அவர் ஒர் அரசியல்வாதியாகவோ இசைக் கலைஞனாகவோ இருக்கலாம். இவற்றில் அவரிடம் எத்தகைய நிறக்கோல்கள் உள்ளன என்று சொல்ல முடியாது. அவருடைய சிறப்பியல்புகளின்மூலம் அவருடைய நிறக்கோல்களின் இயல்பு வெளிப்படாது போயினும், நம்மிடமும் நம் தந்தையிடமும் பொதுவாகக் காணப்பெறும் வழக்கத்திற்கு மாறான பண்புக் கூறுகளை Trails ஆராய்ந்து அவருடைய நிறக்கோல்களில் எது நம்மிடம் வந்துள்ளது என்று ஊகம் செய்யலாம். நம்முடைய தாயின் நிலைமையும் இதுவே. நம்முடைய தந்தை அளித்தது போலவே இவளும் நிறக்கோல்களில் பாதியை நமக்கு அளித்துள்ளாள். அதற்கு மேலாக நாம் வேர்விட்டு வளர்வதற்கேற்ற விளை நிலமாகவும் அவள் உதவுகின்றாள். ஒரு பெற்றோருக்குப் பிறக்கும்