பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 151 குழவிகள் தோற்றத்தில் தந்தையைவிடத் தாயைப்போல் அதிகமாக காணப் பெறாததிலிருந்து இது மெய்ப்பிக்கப் பெறுகின்றது. - (ஈ) நாம் எந்த அளவுக்கு நம்முடைய பண்புக் கூறுகளைக் கடத்தலாம் அல்லது கடத்த முடியும் என்ற எண்ணம். ஒவ்வொருவரிடமும் எழுதல் இயல்பு. முதலில் மரபுவழி இறங்காப் பண்புகள் யாவை என்பதைக் காண்போம். () ஒரு சிறந்த அறிஞனாவதற்கேற்ற வாய்ப்பினைத் தரும் ஜீன்களைக் கொண்டு ஒருவரது வாழ்க்கை தொடங்கி யிருந்திருக்கலாம். ஆனால் வறுமையினாலும் நோயினாலும் மடிமையினாலும் அல்லது வேறு நற்பேறு இன்மையினாலும் அவர்தக்க கல்வி பெறும் வாய்ப்பினை இழந்திருக்கலாம். ஆனால், அவருக்குப் பிறக்கும் குழவிகளிடம் அவருடைய அறிவே ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அவர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டங்களைப் பெற்றால் என்ன அறிவு உண்டாகுமோ அத்தகைய அறிவினைத் தரவல்ல ஜீன்கள் அவர்கள் குழந்தைகள் பல அமைவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. (i) ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது ஒர் அழகிய பெண்ணாக இருப்பதாகக் கருதுவோம். தற்செயலாக நேரிட்ட விபத்தொன்றின் காரணமாகவோ அல்லது குடும்பத்திற்கு ஏற்பட்ட பல இடர்பாடுகளின் காரணமாகவோ அல்லது கொடுமையான நோயின் காரணமாகவோ அந்த மங்கை தன் அழகினை இழக்க நேரிட்டால் அவள் அழகாக இருக்கும்போது பெற்ற குழவிகட்கும் அவள் அழகினை இழந்தபிறகு பெற்றெடுத்த குழவிகட்கும் சிறிதும் வேறுபாடு இராது. ( iii) ஒருவரிடம் எல்லா அழகும். வலிமையும், திறமையும் பொருந்தியிருந்து போர்க்களத்தில் ஏற்பட்ட விபத்துகளால் அடிபட்டுக் கண்ணிழந்து உறுப்புகளை இழந்து நிரந்தரமாகவே சப்பாணியாகி விடுகின்றார் என்று கருதுவோம். இந்த நிலையில் அவருக்குப் பிள்ளைப்பேறு