பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் $53 பெளதிகச் சூழ்நிலையும் உள்ளம் பற்றிய சூழ்நிலையும் அடங்கும் என்பது கவனிக்கத் தக்கது. இங்கு நான் குறிப்பிடும் எடுத்துக்காட்டால் தெளிவுறும். - - (பய் இளைஞர் ஒருவர் மதுபானம் பருகும் பழக்கம் இல்லாத நிலையில் மகப்பேறு அடைகின்றார். பத்தாண்டுகட்குப் பிறகு போரில் பணியாற்றியதன் விளைவாக மதுபானப் பழக்கம் அவருக்கு ஏற்படுகின்றது. எப்பொழுதும் அவர் மயக்க நிலையிலேயே இருக்கின்றார். இப்பொழுது அவருக்கு ஒருகுழந்தை பிறக்கின்றது. இந்த இரண்டு குழவிகளில் இரண்டாவது குழவி குடிப்பழக்கத்தை மேற்கொள்ளுதல் கூடும். இஃது இரண்டாவது குழவிக்குத் தந்தையிடமிருந்து பெற்ற ஜீன்களினிடையே மதுபானப் பழக்கம் இருப்பதால் பெற்றதன்று. ஜீன்களினிடையே அத்தகைய பழக்கம் ஒன்றும் இல்லை. முதல் மகன் குடிவெறி இல்லாத அமைதியான சூழ்நிலையில் வளர்க்கப் பெற்றதால் அவனிடம் இப்பழக்கம் அமைவதற்கு வழி இல்லை. இரண்டாவது மகன் குடிவெறி நிலவும் சூழ்நிலையில் வளர்ந்ததால் அவனிடம் இப்பழக்கம் அமைவதற்கு வழி ஏற்படுகின்றது. மதுபானப் பழக்கம் மரபு வழியாக இறங்கும் ஒரு பண்புக் கூறு அன்று அது சூழ்நிலையால் பெறும் பண்பாகும். - தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் பெறும்." என்ற குறள் கூறும் கருத்தும். இதுவே எனலாம். தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை என்ற உலகியல் பழமொழியும் இதனையே வற்புறுத்துகிறது. எனவே, மரபுவழியும் சூழ்நிலையும் இடைவிடாது இடைவினை புரிவதாலேயே மக்களிடம் பண்புகள் அமைகின்றன என்பது பெறப்படும். மரபுவழி தவறிய இடத்தில் சூழ்நிலை அதனை நிறைவு செய்யும். எடுத்துக்காட்டாக ஒர் இசைப்புலவன் மகனிடம் இசைப் புலமை மரபு வழியாக இறங்காது. அவன்தன் மகனுக்கு 6. குறள் - 114.