பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 155 கொடுமுடியிலிருக்கும்பொழுது இணைவதாலோ, அல்லது அவர்கள் யாதோ ஒரு குடும்பப் பிரச்சினையின் பொருட்டுப் பேச்சு வார்த்தையின்றி புணர்வதாலோ கருப்பமுற்றுக் குழவி பெற நேரிட்டால் அக்குழவியிடம் பெற்றோரிட மிருந்து கடத்தப் பெறும் மரபுவழி பண்புக் கூறுகளில் யாதொரு மாற்றமும் இராது என்பது மறைமொழி போல் நம்ப வேண்டியதொன்று. - - () திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை சில சமயம் முறைப்படிப் பிறக்கும் குழந்தையினின்றும் சில கூறுகளில் மாறுபடலாம். அக்குழந்தை (அ) மிக நுண்மையுடையதாக அமைந்து விடலாம். (ஆ) சிறு பொருளுக்கும் உள்ளம் நோகக் கூடியதாகவும் இருக்கலாம்; (இ) சில சமயம் அது பேரறிஞனாக வளரும் வாய்ப்பினையும் பெறலாம். (ஈ) சில சமயம் முதல் தர குற்றவாளியாகும் வாய்ப்பும் அதற்கு நேரிடாம். எ-டுகள் : லியனார்டோ என்ற புகழ் பெற்ற இத்தாலிய வண்ண ஒவியரும், அலெக்ஸாண்டர் ஹாமில்ட்டன் என்ற அரசியலறிஞரும்; ஹிட்லர் என்ற செர்மானிய சர்வாதிகாரியும் சட்டப்படிப் பிறக்காதவர்கள் தாம். அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிவோம் பாரதத்தில் வரும் கண்ணன் வாழ்க்கை (சிறையில் பிறப்பு)யிலும் இந்த உண்மையைத்தான் காண்கின்றோம். எனவே, இயற்கையன்னை திருமணச் சான்றிதழை என்றுமே பொருட்படுத்துவதில்லை என்பது ஈண்டு அறியப் பெறும். - சூழ்நிலை : முறைப்படிப் பிறக்காத சூழ்நிலை மாறுபடும்பொழுதுதான் அதன் தன்மையும் முறைப்படிப் பிறந்த தன்மையினின்றும் மாறுபடுகின்றது. முறைப்படிப் பிறக்காத குழந்தையின்மீது சமூகம் கருணை காட்டாததால், அது நல்ல சூழ்நிலையில் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாது போய்விடுகின்றது. வாழ்க்கை முழுவதும் அதற்குப் பல இடர்பாடுகள் இருந்து கொண்டே உள்ளன. சிலசமயம் இந்த இடர்ப்பாடுகள் விநோதமான திசைகளிலும் நேரிடுகின்றன.