பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 தமிழில் அறிவியல் செல்வம் ஆனால், திருமணம் ஆகாது தாய்மையை அடையும் பெண்ணின்மீது கருணைகாட்டியும் அப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் எல்லா வாய்புக்களைக் கொடுத்தும் உதவினால், தகாத பிறப்பு என்ற கூறு தன் செல்வாக்கை இழந்து விடுகின்றது. (எ-டு) குழந்தைப்பேறு இல்லாத ஒரு வணிகர் ஏழுநாள் வயதுள்ள ஒரு முறைப்படி பிறக்காத Bestard iii பெண் குழந்தையொன்றை அனாதை ஆசிரமத்திலிருந்து தத்து எடுத்து வளர்த்து வருகின்றார்; இங்கனமே இத்தகைய பெண் குழந்தையொன்றை ஆசிரியர்களின் பெற்றோர் எடுத்து வளர்த்து வருகின்றனர். அக்குழந்தைகட்கு அவர்கள் ஏற்படுத்தும் பல்வேறு நல்ல சூழ்நிலைகளால் சிறந்த பலனை அடைவார்கள் என்பதுதான் காரணம். பெற்றோர்களின் வயதும் குழந்தையின் இயல்பைப் பாதிக்கும் என்பதும் சிலரது நம்பிக்கை தாய் நாற்பத்தைந்து வயதும் தந்தை அறுபது வயதும் உள்ள பொழுது பிறக்கும் குழந்தை மென்மையாகவும் அடிக்கடிநோய்வாய்ப்படும் நிலையிலும் உள்ளது. இவ்வாறு இருப்பதற்குக் காரணம் பெற்றோர்களின் பாலணுக்களின் தளர்ச்சியினால் அன்று. ஆனால் வயது முதிர்ந்த தாயின் கருப்பையில் தக்க சூழ்நிலை இல்லாமையாலும், அத்தகைய நாட்பட்ட பேறுகள் தேவை இல்லாதபொழுதும், குழந்தைப் பேற்றிற்குரிய நிலைகள் சரியாக இல்லாதபொழுதும் ஏற்படுவதாலும் உண்டாகின்றது என்று சொல்லலாம், குழந்தை பிறந்த பிறகு வேறு சில கூறுகளும் பங்கு பெறுகின்றன. இக் குழந்தையைச் சுற்றி வயது முதிர்ந்த அதன் பெற்றோர்களைத் தவிர, வயது முதிர்ந்த அதன் அண்ணன் மாரும் தங்கைமாரும் அவர்களுடைய நண்பர்களும் சதாசூழ்ந்துகொண்டு இளக்காரம்’ கொடுப்பதால் அது கெட்டுப்போதற்கேற்ற சூழ்நிலை உண்டாகின்றது. அங்ங்னமே பதினேழு வயதிற்குக் குறைவாகவுள்ள தாய்மார்களிடமும் கருப்பை சூழ்நிலையும் குழவி பிறந்தபிறகு புறத்தேயுள்ள நிலைமைகளும் சரியாக