பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 157 இல்லாதுள்ளன. தாய் முதிர்ச்சி பெறாத நிலை, அவளுக்கும் குழந்தைக்கும் உடல்நிலையில் கேடு தருவதுடன், தக்க சமூக அநுபவம் இல்லாமையால் உள நிலையிலும் கேடு தருவதாகின்றது. - (ii) கலவிபுரிதல், தாய்தந்தையராதல் ஆகியவற்றுடன் தொடர்புள்ள செய்திகள் : இவைபற்றியும் சில தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. (அ) ஒரு பெண் பிராணியை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆண் பிராணிகளுடன் தொடர்ந்து பொலியச் செய்தால், முதலில் தொடங்கின ஆணின் செல்வாக்கு பின்னர் தொடங்கின் ஆணுக்கும் பிறக்கும் குட்டிகளுடன் காணப்பெறும் என்பது ஒரு கொள்கை (Telegong) ஒர் ஆண் பிராணி ஒரு தாழ்ந்த இனத்துடன் பொலிந்து பின்னர் ஒரு பெண் பிராணியுடன் பொலிந்தால், தாழ்ந்த இனப் பெண்பிராணிகளிடமுள்ள ஒரு சில சிறப்பியல்புகள் இரண்டாவது பெண் பிராணிகட்குப் பிறக்கும் குட்டிகளிடம் காண்ப்பெறும் என்பது மற்றொரு கொள்கை (Irfection). ஒர் ஆண் பிராணியும் பெண் பிராணியும் தொடர்ந்து பொலிந்தவண்ணம் இருந்தால் அவற்றிற்குப் பிறக்கும் குட்டிகள் யாவும் தாய் தந்தையர்களைப் போலவே காணப்பெறும். ஒரு பெண்பிராணி ஒரே ஆணுடன் எவ்வளவுக்கெவ்வளவு அடிக்கடி பொலிவதற்கு வாய்ப்பு பெறுகின்றதோ, அதற்கேற்ப அதற்குப்பிறக்கும் குட்டிகள் யாவும் ஆண் பிராணியையே ஒத்திருக்கும். இக் கொள்கை யாவும் மானிட இனத்திற்கும் பொருந்தும் என்று நம்புகின்றனர். இருவர்நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தால் சூழ்நிலை, உணவு முறை, பழக்கவழக்கங்கள், வேறு வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றின் பொதுவிளைவுகள் இருவரிடமும் காணப்பெறும் என்பது இதற்கு ஒரு விளக்கமும் தரலாம். இங்ங்னம் கலவியைப்பற்றிய தவறான நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் சேர்ந்து ஒரு தனிப்பெரும் நூலாகவே அமையலாம்.