பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - உயிரியல் நோக்கில் {4} ஜீன்களின் திருவிளையாடல் : நிறக்கோல்களைப்பற்றி முன்னர் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கொள்ள வேண்டும். ஒவ்வோர் உயிரியின் ஒவ்வோர் உயிரணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்கள் உள்ளன23) என்றும், இவை ஒத்துள்ள இணைகளாக அமைந்து கிடக்கும் என்றும், இவற்றில் ஒவ்வோர் இணையிலும் உள்ள ஒன்று தாயின்வழி வந்தது என்றும் மற்றொன்று தந்தையின் வழி வந்தது என்றும் குப்பிட்டோம். ஒவ்வோர் இணையையும் உற்று நோக்கினால் அவற்றிலுள்ள நிறக்கோல்கள் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவரும் இறுதியில் ஒர் இணையில் உள்ள நிறக் கோல்கள் மட்டிலும் வேற்றுமை யுடையனவாக இருக்கும். அவைதாம் (xy). புதிதாகத் தோன்றக் கூடிய உயிர் ஆனா? பெண்ன? என்பதை அறுதியிடுபவை. இதனைப் பின்னர் விளக்குவேன். கரு உயிரணுவில் மட்டிலும் ஒற்றை நிறக்கோல்கள் இருக்கும் என்று சுட்டியுரைத்தேன். ஜீன்கள் : இந்த ஒற்றை நிறக்கேர்லில் உருண்டை மணிகள் போன்றவை நெருக்கமாக கோக்கப் பெற்றுள்ளமை தெரிய வரும். இவையே மரபு வழிப் பண்புகளை - குடிவழிக் கூறுகளை தாங்கி நிற்கும் ஜீன்கள் (Genes ஆகும். இவைதாம் பெற்றோரிடமிருந்து பிள்ளைகட்குக் கடத்தப் பெறுபவை. ஒவ்வொரு நிறக்கோலிலும் கிட்டத்தட்ட 3000 ஜீன்கள் இருப்பதாகக் கால்வழியியல் வல்லுநர்கள் ஆய்ந்து கண்டுள்ளனர் இந்த ஜீன்களை மிக நுட்பமாக அமைக்கப் பெற்றுள்ள எலக்ட்ரான் நுண்பெருக்கியிலும் (Electron ாroscope) காண்பது அரிது. அவற்றை நன்கு உற்று நோக்கி அவற்றிடையேயுள்ள புறத் தோற்ற வேற்றுமைகளைக் காண முடியாதுபோயினும், ஒருவித பழ ஈக்களை (Fruifபு ஆய்ந்து ஒவ்வொரு ஜீனும் ஒரு திட்டமான பண்புக்கும் செயலுக்கும் காரணமாகின்றது என்பதை நிலை நாட்டியுள்ளனர்.