பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கில் 164 மரபுவழிப் பண்புகள் : ஒரு குழந்தை தன்னுடைய இரண்டு பெற்றோர்களிடமிருந்து புதிய வகைச் சேர்க்கை ஜீன்களைப் பெறுகின்றது. இந்த ஜீன் களை அது தமது பெற்றோர்களிடமிருந்தும், அவர்கள் தங்களது ஜீன்களைத் தமது பெற்றோர்களிடமிருந்தும் பெற்றவையாகும். எனவே ஜீன்கள் வழிவழியாகப் புதிய புதிய சேர்க்கையாகச் சந்ததியினருக்கு இறங்கிக் கொண்டுள்ளன என்பது தெளிவாகும் ஆகவே, ஒரு குழந்தை தன்னுடை ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து பெறும் ஒவ்வொரு நிறக்கோல்களும் தன்னுடைய இருவழிப் பாட்டன்மாரிடமிருந்து பெற்றவையாகும். இந்த முறையில் குழந்தை தன்னுடைய தந்தையின் எந்த ஒரு விந்தனு தன்னுடைய தாயின் எந்த ஒரு முட்டையைச் சந்தித்துக் கருவுறச் செய்கின்றது என்பதைத் தற்செயலே (Chance) அறுதியிடுகின்றது. வழிவழியாக அமையும் இந்த விந்தணுக்களிலும் முட்டைகளிலும் நிறக்கோல்களின் அமைப்பு எண்ணற்ற முறைகளில் சேர்ந்து அமையும். எனவே, மரபுப் பண்புகள் தற்செயலாகவே இறங்கி வருகின்றன என்பதை உளங்கொள்ள வேண்டும். இத்தகைய நுண்ணிய ஜீன்கள் ஒரு மனிதனுடைய - வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய திறனைப் பெற்றிருப்பதை எண்ணும்போது நாம் உண்மையிலேயே மயிர்சிலிர்க்கக் கூடிய நிலையில் வியப்புக் கடலில் ஆழ்கின்றோம். ஆண்டவன் படைப்பின் அற்புதத்தை எண்ணி எண்ணிக் களிக்கின்றோம். நம்மையும் அறியாமல் நோக்கரிய் நோக்காம் நுணுக்கரிய நுண்ணுர்வாம் கடவுள் தத்துவத்தில் திளைக்கின்றோம். அகமும் புறமும் : வானநூல் அறிஞர்கள் கூற்றிலிருந்து பேரண்டத்தைப் (Macrocosா பற்றிய கருத்துகள் நமக்குப் பழக்கமாய் விட்டன. பெருமையின் அளவற்ற தன்மையை (infinit, arbigress) நம்மால் உணர முடிகின்றது. கதிரவன் கோடிக் கணக்கான மைல் தொலைவில் இருப்பதாகவும் மின்மினி 10. திருவாக சிவபுராணம் - அடி 96.