பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 163 செயல்களிலிருந்து இந்த ஊகங்கள் எழுந்தவை. இவற்றை நாம் நம்பும் அளவுக்கு நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று அறிவியலறிஞர்கள் அனுபற்றிய பல நுண்ணிய செய்திகளையும் படித்து உணரும் நமக்கு இப்பழக்கம் எளிதில் கைவரக் கூடியதே. நம்பிக்கையும் ஐயமும் : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் முன்னதாக வருவதைக் கூறும் செய்தியை நம்புகின்றோம். இவ்வாறு நம்புவதற்குக் காரணம் அத்தகைய முற்கூற்றுகள் அடிக்கடி உண்மையாகவே நடைபெறுவூதேயாகும். அங்ங்னமே ஜீன்களைப் பற்றிக் கால்வழியியல் அறிஞர்கள் (Genetists) முன்னதாகக் கூறும் சில செய்திகளை நம்புவதற்கு நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜீன் திட்டப் படுத்திய ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட பொருள்களை உண்டாக்கிக் குறிப்பிட்ட விளைவுகளைக் காட்டும் என்று அவர்கள் கூறுவதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையும் ஐயமும் அறிவு வளர்ச்சியின் இரு மூலவேர்கள். ஆயினும் வானநூல் அறிஞர்களைப் போலன்றிக் கால்வழியியல் அறிஞர்கள் தம் கூற்றுகளில் சற்று அடக்கமாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில் வானஇயலை நோக்கக் கால்வழியியல் (Genetics) ஒரு சிறு குழந்தையே. தவிர, ஜீன்களும் உயிருள்ள பொருள்கள். அவற்றின் செயல்களும் பல்வேறு எண்ணக் கூறுகளால் மிகச் சிக்கலாகும் தன்மையுடையவை. எனினும், பல இடர்ப்பாடுகளிடையேயும் கால்வழியியலறிஞர்கள் ஜீன்களைப் பற்றியும் அவை செயற்படும் முறைகளைப் பற்றியும் பல உண்மைகளை நிலைநாட்டியுள்ளனர். இவற்றை நாம்அறிய அறிய நம்முட்ைய பிறப்பின் இரகசியம் - நுட்பம் - தெளிவாகின்றது. அவை நம்மை வியப்புக் கடலிலும் திளைக்கச் செய்கின்றன. - (5) அதிசயப் பிறப்பு : கருவுற்ற முட்டையிலிருந்து நாம் தோன்றினோம் என்பதை நாம் அறிவோம். சகரபுத்திரர்கள் அறுபதினாயிரம் பேர்க்ள் என்று புராணம் கூறும். த.1கி.