பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழில் அறிவியல் செல்வம் நம்முடைய இருந்த, இருக்கின்ற பெற்றோர்களோ கோடிக்கணக்கானவர்கள். இவர்களுள் ஒரு குறிப்பிட்ட இருவர் கலந்ததனால் நாம் தோன்றினோம். எத்தனையோ தற்செயல்களில் ஒன்றின் விளைவாக நாம் நம் பெற்றோருக்குப் பிள்ளையானோம். குழந்தைகள் பெறும் எண்ணிக்கைக்கு ஒருவரையறை மட்டிலும் இல்லாதிருக்குமாயின் வெவ்வேறுவிதமான சகோதரர்கள் நம்முடன் பிறந்திருத்தல் கூடும். குறைத்துப் பகுத்தல் முறையில் பிரிவதால் யாதொரு குறையும் இருப்பதாக இதுகாறும் அறிவியல் கண்டறியவில்லை..பிரிதலைச் தற்செயலே அறுதியிடுகின்றது. ஆகவே, பிரிதல் நிகழ்ந்த பிறகு ஒர் உயிரணுவில் தாய் வழியாக வந்த 20 நிறக் கோல்களும், தந்தை வழியாக வந்த 3 நிறக்கோல்களும் அமைந்து 23 நிறக்கோல்களாகலாம்; அல்லது தாய் வழியாக வந்த 8 நிறக்கோல்களும் தந்தைவழியாக வந்த 15 நிறக்கோல்களுமாக அமைந்து 23 நிறக்கோல்களாகலாம்; ஒரு குறிப்பிட்ட பெற்றோர் தம்முடைய முட்டையணுக்கள் அல்லது விந்தனுக்களில் எத்தனை வெவ்வேறு விதமான நிறக்கோல்களின் சேர்க்கையினை விளைவித்தல் கூடும் என்பதனைக் கணிதம் மூலம் அறுதியிட்டு விடலாம். 23 இணைகள் உள்ள ஒர் உயிரியிடம் சேர்க்கைகள் உண்டாகின்றன. இவ்விதம் ஒரு முட்டையணுவும் விந்தணுவும் சேர்ந்து கருவுறுங்கால் 16, 777, 216 தடவைகளில் ஒரு சேர்க்கை நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது." ஆனால், ஒரு குறிப்பிட்ட குழந்தை பிறப்பதற்கு திட்டமிடப் பெற்ற ஒரு விந்தணுவும், திட்டமிடப் பெற்ற ஒரு முட்டையணுவும் ஒன்று சேர்தல் வேண்டும். இவண் குறிப்பிட்டவற்றைக் கொண்டு நாம் பிறப்பதற்கு என்ன நிகழ 12 விளக்கம் 10 பெண்ணும் 10 കൃജ്ജ திருமணம் புரிந்து கொள்ளக் கூடுமானால் 100 விதமாகத் திருமணம் புரிந்து கொள்ளலாம். இதுபோலக் கணக்கிடுக.