பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 165 வேண்டும் என்பதை எண்ணிப்பார்ப்போம். சரியான தருணத்தில் 16, 777, 26 விந்தணுக்களில் ஒன்று திட்டமிடப் பெற்ற ஒரு முட்டையைச் சேர்ந்திருக்க வேண்டும். இந்த விந்தணுவில் பாதியும் முட்டையணுவில் பாதியுமாகச் சேர்ந்தே நாமாகப் பிறந்திருக்ககின்றோம். இது 16, 777, 216 x 16, 777, 216 தடவைகளில், அதாவது கிட்டத்தட்ட 300,000,000,000 தடவைகளில் ஒன்றாகத்தான் நிகழ்தல் கூடும். இவற்றுடன் வேறுகூறுகளும் சொல்ல வேண்டியதில்லை; இன்னும் இந்த வாய்ப்பு அரிதாகின்றது. எனவே, நம்மை உருக்கி வார்த்தாலொத்த மற்றோருவரை இந்த உலகில் காண்பதென்பது குதிரைக் கொம்பாகும். நம்மைப்போல் ம்ற்றெருவர் இருந்தால் என்ன? இராமல் போனால் என்ன? அதைப்பற்றி நாம் கவலை கொள்ளவேண்டியதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட விந்தனு ஒரு குறிப்பிட்ட முட்டையணுவுடன் சேர்ந்துதான் ஒரு தொல்காப்பியன், ஒரு வள்ளுவன், ஒரு கம்பன், ஒர் இராமகிருஷ்ண பரமஹம்சர், ஒர் இராமலிங்க அடிகள், ஒரு காந்தியடிகள், ஒரு பாரதியார், ஒரு பெரியார் தோற்றுவித்திருக்க வேண்டும் என்பதை எண்ணும்போதுதான் படைப்பின் அற்புதம் தெளிவாகின்றது. நம்மையே நாம் மறந்து அவன் திருக்கூத்தில் ஈடுபட்டுக் களிக்கின்றோம். பக்திப் பெருக்கு கரைபுரண்டோடத் தொடங்கிவிடுகின்றது. ஒர் எல்லையற்ற தடவை கட்கொருமுறை நிகழும் தற்செயல்தான் நம்முடைய குழவி கூர்த்தமதியுடன் பிறப்பதும், மந்தமதியுடன் பிறப்பதும், அழகனாகப் பிறப்பதும் எட்டேகால் இலட்சணமாகப் பிறப்பதும் அறுதியிடப் பெறுகின்றன. (6) அற்புதச் சிற்பிகள் : அவள் முகத்தில் இலக்குமி தாண்டவ மாடுகின்றாள் அவர் முகத்தில் விழித்தாலும் மூன்று நாளைக்குச் சோறு அகப்படாது என்ற பழமொழிகளை நாம் அடிக்கடிப் பலர் வாயினின்று பிறப்பதைக் காண்கின்றோம்: கேட்கின்றோம். இவ்வாறு ஒருவரது முகத்தோற்றத்தில்