பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 தமிழில் அறிவியல் செல்வம் அழகும் அருளும், அதிர்ஷ்டமும் அமைவது ஜீன்களின் செயல்களைப் பொறுத்தது. மூக்கு, கண்ணின் வடிவம், காதுகள், உதடுகள் பற்கள் முதலியவை ஒருங்கு சேர்ந்துதான் முகத்தோற்றத்திற்குக் காரணமாகின்றன. இன்வ ஒவ்வொன்றிலும் தாயின் வழியாகவும் தந்தையின் வழியாகவும் வந்த ஜீன்கள் பங்கு பெறுகின்றன. புதிதாக ஒரு மனிதனைப் படைப்பதில் ஜீன்கள் அற்புதச் சிற்பிகள் போல் பணியாற்றுகின்றன். ஒரு ஜீன் மிகத் திறமையாகவும் மற்றொன்று திறமையற்றும் இருக்கும்; ஒன்று நாம் எதிர்பார்க்கும் வண்ணம் செயலாற்றும்; மற்றொன்று முற்றிலும் அதற்கு மாறாகச் செயல்படும். ஜீன்களில் வன்மையானவற்றை ஓங்கி நிற்கும் ஜீன் (Dominal gene என்றும் மென்மையானவற்றை பின்தங்கி நிற்கும் ஜீன் (Recessie gene என்றும் வழங்குவர். மூக்குபற்றி தாய் வழி வந்த ஜீன் ஓங்கி நிற்கும் ஜீனாகவும், தந்தைவழி வந்த ஜீன் பின்தங்கி நிற்கும் ஜீனாகவும் இருப்பின் குழந்தையின் மூக்கு தாயின் முக்குபோல் அமையும். இங்ஙனமே தாயின் கண்பற்றிய ஜீன் பின்தங்கும் ஜீனாகவும் தந்தையின் ஜீன் ஓங்கி நிற்கும் ஜீனாகவும் இணையின் தந்தையின் கண்போல் அமையும். இங்ங்னமே ஒவ்வோர் உறுப்புபற்றிய ஜீன்கள் இணைந்து விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் உயிரணுவின் சூழ்நிலையும் - வேதியியல் அமைப்பு, ஊட்டநிலை, உடல்நல நிலை போன்றவை - அது அமைந்துள்ள நிலையும் ஜீனின் வேலையைப் பெரிதும் பாதிக்கச் செய்யும். இக்காரணங்களில் வரையறை இல்லாத வகைகளில் மனிதர்கள் தோன்றி வருகின்றனர் என்பதை ஈண்டு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். {7) ஆனா? பெண்ணா? மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு." 13. குறள் - 64