பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழில் அறிவியல் செல்வம் முதிர்ச்சியடையும்பொழுது குறைத்துப் uðāgā' (Reduction division) என்ற ஒருமுறையில் பிரிவுபடும். இவ்வாறு பிரிவுபடும்போது பெண்ணின் முட்டையில் ஒவ்வொன்றும் 22 + x நிறக்கோல்களைக் கொண்டிருக்கும். 23வது இணையிலுள்ள நிறக்கோல்கள் இரண்டாகப் பிரிவுற்று ஒவ்வொரு முட்டையிலும் 22 + x நிறக்கோல்கள் வீதம் அமைவதே இதற்குக் காரணமாகும். இதனால் பெண்ணிடம் உண்டாகும். முட்டைகள் யாவும் ஒருவகையைச் சார்ந்தனவே என்பது புலனாகும். ஆனால் ஆணின் உயிரணு முதிர்ச்சி அடைந்து பிரியும்பொழுது x நிறக்கோல்கள் ஒரு விந்தணுவிலும் y நிறக்கோல் பிறிதொன்றிலுமாகச் செல்லும் ஆகவே, ஆணிடம் இருவகையான விந்தனுக்கள் உண்டாகின்றன. ஒரு வகையில் 22 + x நிறக்கோல்களும் மற்றொரு வகையில் 22 + y நிறக்கோல்களும் அடங்கும். முட்டைகள் கருவுறுங்கால் நிகழ்வது என்ன? x நிறக்கோல்கள் அடங்கிய விந்தணு ஒன்று முட்டையில் புகுந்து கருத்தரித்தல் நிகழும். கருவுற்ற முட்டையில் 44 +x + y நிறக்கோல்கள் இருக்கும். இது ஆண்மகவாகும். y நிறக்கோல் அடங்கிய விந்தனு ஒரு முட்டையில் புகுந்து கருத்தரித்தல் நிகழும். கருவுற்ற முட்டையில் 44 + x + y நிறக்கோல்கள் இருக்கும் இது ஆண் மகவாகும். இக்கூறியவற்றால் ஆணின் விந்தணுக்களே பிறக்கும் குழவியின் பாலை அறுதியிடுகின்றன என்பது தெரிகின்றது. ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் காரணமாக இருப்பவன் ஆணே பெண்ணைக் குறைகூறி மற்றொருத்தியை ஆண் மகவு பெறுவதற்காக இரண்டாந்தாரமாக மனப்பது அறியாமை. இதில் ஆணையும் குறை கூறுவதற்கில்லை. புணர்ச்சியின் பொழுது இலட்சக் கணக்காக வெளிப்படும் இருவகை விந்தணுக்களிலும் எது முட்டையை அடைகின்றது என்பதைத் திட்டமாகக் கூற முடியாது. அது தற்செயலாக