பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 169 நடைபெறும் சேர்க்கையே ஒற்றையா இரட்டையா என்று பார்க்கும் முறையையொத்ததே. அன்றியும் முட்டைகருவுறும் பொழுதே பிறக்கும் குழந்தையின் பால் அறுதியிடப் பெறுகின்றது. அதனை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்பது அறியத்தக்கது. {8} இரண்டும் கெட்டான்கள் : ஒரு கணவன் மனைவியரிடையே குழந்தைப் பேறு வேண்டுமென்ற ஆசை இருந்து வந்தது. ஆனால், ஆண் குழந்தை வேண்டுமா? பெண்குழந்தை வேண்டுமா? என்ற முடிவு அவர்களிடம் தீராதிருந்தது. இந்த நிலையில் அவர்கட்குக் குழந்தைப்பேறு ஏற்பட்டது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாகவும் இல்லை; பெண்ணாகவும் இல்லை! இஃது எல்லோரும் அறிந்த கதை இத்தகைய இரண்டும் கெட்டான் குழவிகள் ( belமerers பிறப்பது உண்டு. ஆனால், இது பெற்றோர்களின் எண்ணத்தால் ஏற்படுவதில்லை. இஃது ஏதோ கால்வழிஇயல் கூறுகளில் ஏற்படும் மாற்றத்தால், சூழ்நிலையில் ஏற்படும் நிலைகுலைவினால் ஏற்படுகின்றது. இவற்றால் பால் அமைப்பில் பல்வேறு இயல்பு தன்மைகள் அல்லது குறைகள் உண்டாகின்றன இயற்கையின் விநோதத்தால், நம்மாழ்வார் இறைவனைப் பற்றி, ஆணல்லன், பெண்ணல்லன், அல்லா அலியுமல்லன்' என்று கூறும் நிலையில் ஏதேர் ஒரு குழவி தோன்றுகின்றது. x, y நிறக்கோல்கள் மட்டிலும் பால் அல்லது பாலியல்புகளை அறுதியிடும் கூறுகளன்று. இவை ஏதோ ஒருவகையில் ஆணாகவோ பெண்ணாகவோ அமையும் செயலைத் தொடங்கும் முக்கியமான ஜீன்களைக் கொண்டிருப்பினும், இருபாலாரிட மிருந்து பெறும் வேறு நிலைகளிலுள்ள பாலின் செல்வாக்கு நல்கும் (Sexifencing ஜீன்களும் உள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும். 14. திருவாய்.2-510