பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழில் அறிவியல் செல்வம் எப்படியிருந்தபோதிலும் எல்லோரும் தொடக்கத்தில் ஏதாவது ஒருவகைப் பாலியல்புகள் அமைவதற்கு வேண்டிய sopotušilsonoré (Potentialities) தம்மிடம் கொண்டுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முன்னுள்ள கருநிலையின் தொடக்கக் காலங்களில் ஒரே மாதிரியான பால்சுரப்பிகளும் ஆண் gërsis (Maleness)s»uuļib Gucing5särsolosoluuqib (Femaleness) விளைவிக்கும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள பாலுறுப்புகளும் இருபாலாரிடையேயும் இருப்பதை நாம் காணலாம். இந்த நிலையினின்றுதான் பால் அறுதியிடும் செயல் நிகழ்கின்றது. சாதாரண நிலையினுள் x, y நிறக்கோல்களமைந்த குழவியிடம் ஆண் தன்மையை விளைவிக்கும் கூறுகளும் பாலியல்புகளும் முழுநிலை அடையும் வரையிலும் படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றன. இப்பொழுது பெண் தன்மையை விளைவிக்கும் உறுப்புகளும் பாலியல்புகளும் வளர்ச்சி பெறாத நிலையிலுள்ளன. இங்ங் ன மே சாதார ண நிலை யிலுள்ள x x நிறக்கோல்களைமைந்த குழவியிடம் "பெண் தன்மையை விளைவிக்கு உறுப்புகளும் பாலியல்புகளும் முழுநிலையை எய்தும் வரையிலும் படிப்படியாக வளர்ச்சி பெறுங்கால் ஆண்தன்மையை விளைவிக்கும் உறுப்புகளும் உடலியற் கூறுகளும் அழுந்திய நிலையிலேயே உள்ளன. ஆனால் கருவுற்ற நிலையிலிருந்து இங்கனம் படிப்படியாக வளர்ச்சி பெறும் நிலையில் ஏதோ ஓரிடத்தில் இச்செயலில் ஏதோ ஒருவகைத் தவறு நிகழலாம். குழந்தையின் பால் அமைக்கப் பெற்றதாகத் தோன்றினாலும், இச்செயல் ஒரளவு பின்னோக்கி வருதலும் கூடும், உண்மையில், ஒரு குழந்தையின் பாலின் வகை அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் சிறிதளவு மாற்றப்பெறலாம். இஃது இயற்கையன்னை புரியும் ஒருவித திருவிளையாடில், இங்கனம் மனிதர்களிடம் பல்வேறு படிநிலைகளால் இரு பாலாரின் உறுப்புகளைக் கொண்டிருத்தல் அல்லது