பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gólfsso e flexíluso Gasosuto - 471 இருபாலாரின் இடைநிலைப் பண்புக் கூறுகள் (கொங்கை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, முகத்திலும் உடலிலும் மயிர்த்தோற்றம் முதலியவை காணப்பெறுதல் போன்ற இருபாலுக்கிடைப்பட்ட நிலைகள் intersexualcondition)நிகழ்கின்றன. சரியாக வளர்ச்சி பெறாத ஆணுறுப்புகளையும் பல்வேறு படிநிலைகளில் பெண் பிறப்புறுப்பு வளர்ச்சியினையும் கொண்ட ஆண்களும் அங்ஙனமே சரியாக வளர்ச்சி பெறாத அல்லது முழுநிலை பெறாத பெண்ணுறுப்புகளையும் அடிப்படை நிலையிலுள்ள அல்லது சில சமயம் நன்கு வளர்ந்த ஆணுறுப்புகளையும் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்." உண்மையான இருபாலினர் (Heாaphrodite அஃதாவது காமச்சுரப்பிகள் (Sexglands, பால்உறுப்புகள், இருபாலினரின் சிறப்பியல்புகள் இவற்றுடன் கூடிய முழுநிலை, இரண்டுங் கெட்டான் நிலை இருப்பது மிகவும் அரிது. இதுகாறும் மருத்துவ ஏடுகளில் இத்தகையோர் நாற்பது பேர்தான் இடம் பெற்றுள்ளனர். இருபாலினரின் இளஞ்சூல் நிலையில் ஆண் தன்மை'யையும் பெண்தன்மை'யையும் விளைவிக்கும் வளர்ச்சியுறாத பால் சுரப்பிகளும், பால் - உறுப்புகளும் காணப்பெறின், அந்த இரண்டு பால் - பொறியமைப்புகள் சாதாரணமாக ஒன்று மற்றதை விட முக்கிய வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக இரண்டும் சரிசம வளர்ச்சி பெறுகின்றன. யாதோ ஒருவகை நிலைகுலைவினால் இங்ங்ணம் மூன்று கால் ஓட்டம்போல் Tiedrace ஒரே வேகமான ஒட்டம் திகழ்கின்றது. ஆனால் இதுகாறும் மனித இனத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இயங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்த உயிரியை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை அத்தகை ஓர் உயிர் மருத்துவப் பதிவேடுகளில் இடம் பெறவும் இல்லை. 15. பெரிய திருவிழாக் காலங்களில் திருப்பதியில் ஆண்கள் போன்ற பெண்கள் முகச்சவரம் செய்து கொண்டும் சேலைகளை உடுத்திக் கொண்டும் கூட்டம் கூட்டமாக நடையாடுவதை இன்றும் காணலாம்.